இயற்கை விவசாயம் பேரிக்காய் சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..!

இயற்கை விவசாயம் பேரிக்காய் சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..!

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இந்த பழத்தை நாட்டு ஆப்பிள் என்று கூட அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில பேரிக்காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். பேரிக்காய் சாப்பிட்டல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுவை நிறைந்த இந்த பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து கணிசமான அளவு இதில் உள்ளது.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!

சரி வாங்க இயற்கை விவசாயத்தில் பேரிக்காய் சாகுபடி (pear cultivation) செய்வது எப்படி என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம்.

பேரிக்காய் சாகுபடி இரகங்கள்:-

பேரிக்காய் சாகுபடி பொறுத்தவரை நியூ பேரீ, கீஃபர், வில்லியம், நாட்டு பேரீ மற்றும் ஜார்கோ நெலி போன்ற இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

மண்:-

பேரிக்காய் சாகுபடி (pear cultivation) பொறுத்தவரை நல்ல வடிகால் வசதி உள்ள களிமண் மற்றும் செம்மண் நிலங்களில் சாகுபடி செய்யலாம். மண்ணின் கார அமிலத்தன்மையானது 5.8 முதல் 6.2 வரை இருக்கவேண்டும்.

பருவகாலங்கள்:-

பேரிக்காய் சாகுபடி (pear cultivation) பொறுத்தவரை ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை நடவுக்கு ஏற்ற பருவம் ஆகும்.

நிலம் மேலாண்மை:-

சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தினை நன்கு உழுது சமன்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதில் நீளம், அகலம் மற்றும் ஆழம் என்ற முறையில் 60 செ.மீ x 60 செ.மீ x 60 செ.மீ அளவுள்ள குழிகளை வெட்ட வேண்டும். அதில் தொழுஉரத்தை மேல்மண்ணுடன் கலந்து இட்டு குழிகளை நிரப்பி ஆறவிட வேண்டும்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!

விதை:-

பேரிக்காய் சாகுபடி (pear cultivation) பொறுத்தவரை நடவு செய்வதற்கு ஒட்டு கட்டிய செடிகள் மற்றும் வேர் பிடித்த குச்சிகளை விளைச்சலுக்கு பயன்படுத்த வேண்டும்.

விதைத்தல்:-

குழிகளுக்கிடையே உள்ள இடைவெளி 5 x 5 மீட்டர் அல்லது 6 x 6 மீட்டர் இருக்குமாறு கன்றுகளை குழியின் மத்தியில் நடவு செய்ய வேண்டும்.

நீர் மேலாண்மை:-

பேரிக்காய் சாகுபடி பொறுத்தவரை நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். செடிகள் நன்கு வளரும் வரை, வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டியது அவசியம்.

உரமேலாண்மை:-

காய்க்கும் மரங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 25 கிலோ தொழு உரம், 500 கிராம் தழைச்சத்து, 1 கிலோ சாம்பல் மற்றும் மணிச்சத்து அளிக்கவேண்டும். மேலும் 20 கிராம் யூரியாவை கலந்து அளிக்க வேண்டும். இதையே இரண்டாக பிரித்து அளிக்கலாம்.

பாதுகாப்பு முறைகள்:-

களை நிர்வாகம்:-

பேரிக்காய் சாகுபடி (pear cultivation) பொறுத்தவரை செடிகளை சுற்றி களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கவாத்து செய்தல் மிகவும் அவசியம். மரங்கள் ஓரளவு வளர்ந்தவுடன் நடுக்கிளையின் நுனியை வெட்டி, பக்க கிளைகளின் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:-

பேரிக்காயை அதிக பூச்சிகளோ, நோய்களோ தாக்குவது இல்லை. எனினும் நோய்த் தடுக்கும் விதமாக, கவாத்து செய்த பின் காப்பர் பூஞ்சாணக் கொல்லி அல்லது மீத்தைல் டெமட்டான் ஒருமுறை தெளிப்பது நல்லது.

அறுவடை:-

பேரிக்காய் சாகுபடி (pear cultivation) பொறுத்தவரை குறுகிய கால இரகங்கள் மே – ஜூன் மாதங்களில் அறுவடைக்கு வரும். நீண்ட கால இரகங்கள் ஜூலை – அக்டோபர் மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.

மகசூல்:-

பேரிக்காய் சாகுபடி பொறுத்தவரை ஒரு வருடத்திற்கு மரம் ஒன்றில் இருந்து, நாட்டு பேரீ 100 முதல் 120 கிலோ, கீஃபர் மற்றும் நியூ பேரீ 70 முதல் 80 கிலோ, வில்லியம் மற்றும் ஜார்கோநெலி 30 முதல் 40 கிலோ மகசூல் கிடைக்கும்.

ரோஸ் செடிக்கு மண் கலவை தயார் செய்யணுமா? அப்போ இதை Try…

பயன்கள்:-

பேரிக்காய் பயன்கள்: 1

தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

பேரிக்காய் பயன்கள்: 2

இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

பேரிக்காய் பயன்கள்: 3

பேரிக்காயில் உள்ள நார்ப் பொருட்கள் குடல் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகின்றன.

பேரிக்காய் பயன்கள்: 4

எலும்புகள் மற்றும் பற்கள் பலவீனமாக உள்ளவர்கள் பேரிக்காய் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

பேரிக்காய் பயன்கள்: 5

கர்ப்பிணி பெண்கள் அன்றாட உணவில் பேரிக்காய் சேர்த்து உண்டு வந்தால், பிறக்கும் குழந்தை வலுவாக பிறக்கும். மேலும், இது தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கும் பால் சுரக்க உதவுகிறது.

பேரிக்காய் பயன்கள்: 6

பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை மற்றும் கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி!!!

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்