எந்த பூச்செடியாக இருந்தாலும் சரி அதில் பூக்கள் அதிகமாக பூக்க இதை மட்டும் செய்யுங்க..!

Advertisement

பூக்கள் அதிகமாக பூக்க என்ன செய்வது

பூச்செடி இல்லாத வீடுகளே பார்க்க முடியாது. சிலர் வீட்டு பூச்செடியில் பூக்கள் அதிகமாக பூத்திருக்கும். சிலர் வீட்டு பூச்செடியில் பூக்களே இருக்காது. பூச்செடி வைத்து அதற்கான உரம், தண்ணீர் ஊற்றி சரியாக தான் பராமரிக்கிறேன், ஆனால் பூக்களே பூக்கவில்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த பதவி பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வீட்டில் எந்த மாதிரியான பூச்செடி இருந்தாலும் இந்த ஒரு கரைசலை மட்டும் ஊற்றினால் போதும் பூக்கள் பூத்து குலுங்கும். அது என்ன கரைசல் எப்படி செய்வது என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

கரைசல் செய்முறை:

பூக்கள் அதிகமாக பூக்க என்ன செய்வது

டீயில் வடிகட்டும் போது வடிகட்டியில் மேலே சக்கை இருக்கும் அல்லவா.! அதை இன்னொரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழித்து பார்த்தால் அதிலிருந்து சாயம் வந்திருக்கும். முக்கியமாக இதில் சர்க்கரை சேர்க்காமல் டீயை போட்டு வடிக்கட்டி இதற்கு பயன்படுத்துங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ கொய்யா மரத்தில் அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் செய்யுங்க..!

அடுத்து அரிசி கழுவிய தண்ணீர், 4 வெங்காய தோல், 4 வாழைப்பழ தோல் போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் போது எண்ணெய் எப்படி இருக்குமோ அந்த பதத்திற்கு  வரும். அப்போது அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இந்த தண்ணீர் ஆறியதும் தண்ணீரை மட்டும் எடுத்து கொள்ளவும். பின் அதில் டீ தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். அவ்ளோ தாங்க கரைசல் ரெடி!

மயில் மாணிக்கம் செடி வீட்டில் வளர்க்கும் முறை…!  👇👇

cypress-vine-indoors-tips-3

பயன்படுத்தும் முறை:

இந்த கரைசலை ஒரு செடிக்கு ஒரு டம்ளர் மட்டும் ஊற்ற வேண்டும். இது போல் வாரத்தில் இரண்டு முறை ஊற்றுங்கள். வேர்களில் படும்படி ஊற்ற வேண்டும். இது போல செய்து வாருங்கள் விரைவிலே பூச்செடியில் பூக்கள் பூத்து குலுங்கும். ட்ரை பண்ணி பாருங்கள் நண்பர்களே..!

இதையும்  படியுங்கள் ⇒ உங்கள் வீட்டு செடிகளை வளர விடாமல் தடுக்கும் பூச்சிகளை விரட்ட இந்த ஒரு கரைசல் போதும்..!

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement