விவசாய தங்க நகை கடன் திட்டம்..! Gold Loan Scheme For Farmers In SBI..!

Advertisement

SBI வங்கி வழங்கும் விவசாய தங்க நகை கடன் திட்டம்..! SBI Gold Loan Scheme For Farmers..!

SBI New Gold Loan Scheme: அனைவருக்கும் வணக்கம்..! இன்று பொதுநலம்.காம் பதிவில் விவசாய துறையில் இருக்கும் விவசாயிகள் அனைவரும் வங்கியில் வாங்கிய கடன் வட்டிகளை செலுத்த முடியாமல் பலர் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் விவசாயத்தை மேலும் தொடர்வதற்கு போதிய தொகை இல்லாமல் மேன்மேலும் கடன் வாங்கும் நிலையில் விவசாயிகள் உள்ளனர். அதனால் SBI வங்கி தற்பொழுது 2 கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. சரி வாங்க நண்பர்களே இப்போது SBI வங்கி அறிவித்துள்ள விவசாய தங்க நகை கடன் திட்டத்திற்கான வட்டி, தகுதிகள், அதன் விதிமுறைகள் பற்றி முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுவோம்..!

newவிவசாய டிராக்டர்க்கான கடனுதவி திட்டம் 2020..! Tractor Loan Scheme 2020..!

 

SBI வங்கியின் நிதி ஒதுக்கீடு(Fund Sanction):

SBI வங்கியில் விவசாயிகளுக்கான குறிப்பிட்ட தொகையினை நிதி ஒதுக்கீடாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. SBI வங்கியில் இருக்கும் தனி தனி கிளைகளுக்கு தொகைகள் அனுப்பப்பட்டுள்ளது. 1 லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகள் மற்றும் விவசாயின் குடும்பத்தினரின் பயன்பாட்டிற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி SBI தனியாக ஒதுக்கியுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு பணிகள் நாட்டில் உள்ள அனைத்து SBI வங்கியின் 10 ஆயிரம் கிளைகளில் தொடரப்பட்டுள்ளது.

SBI வேளாண் தங்க கடன்(Agri Gold Loan):

sbi வங்கி அறிவித்துள்ள இந்த விவசாய தங்க நகை கடன் திட்டத்தில் வேளாண் தொழில் செய்யும் அனைவருக்கும் கடன் கிடைக்கும் வாய்ப்பு அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வாங்கிய கடன் தொகைக்கு குறைந்த வட்டியில் கடனை செலுத்துவதற்கு SBI வங்கி வழி அமைத்துள்ளது.

நிபந்தனை:

SBI வங்கி அறிவித்துள்ள விவசாய தங்க நகை கடன் திட்டத்தில் கடன் பெற நினைக்கும் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமாக இருக்கும் நிலத்தின் ஆவண நகலை வங்கியில் கடன் வாங்கும்போது ஒப்படைக்க வேண்டும்.

நகைகளை அடமானம் வைத்து விவசாயம் செய்ய தேவைப்படும் தொகையினை வங்கியில் பெற்றுக்கொள்ளலாம்.

SBI-ன் கடன் வகை:

sbi வங்கி இரண்டு வகையாக கடன் வகை திட்டத்தை வழங்குகிறது.

*பயிர் உற்பத்தி வேளாண் தங்கக்கடன்(Agri Gold Loan For Crop Production)

*பல்முனை பயன்பாட்டு தங்கக்கடன்(Multi Purpose Gold Loan).

newமூலிகை பயிர்களுக்கான விவசாய மானியம் | Agriculture subsidy schemes

வட்டி விகிதம்:

பயிர் உற்பத்தி வேளாண் தங்கக்கடன் திட்டத்தில் ரூ. 3 லட்சம் வரை கடன் வாங்கும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 7% வட்டி விதிக்கப்படுகிறது. அடுத்து ரூ. 3 லட்சத்திற்கு மேல் வாங்கும் வாங்கும் விவசாய கடனிற்கு ஆண்டுக்கு 9.95% வட்டி வசூல் செய்யப்படும்.

பல்முனை பயன்பாட்டு தங்கக்கடன் திட்டத்தில் வாங்கும் கடன் தொகைக்கு ஆண்டுக்கு 9.95% வட்டி வசூலிக்கப்படும்.

தங்க நகை கடன் திட்ட பயன்கள்(Benefits Of SBI Gold Loan):

இந்த திட்டத்தில் நகைகளை அடமானம் வைப்பதால் கடன் விரைவில் வழங்கப்படும்.

கடன் வழங்குவதற்காக விதிமுறைகள் அனைத்தும் மிக எளிமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

விவசாய தங்கநகை கடன் திட்டத்தில் மிகவும் குறைந்த வட்டி விகிதம்.

வங்கியில் மறைமுகமாக எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.

கடன் தொகையினை திரும்ப செலுத்துவதில், விவசாயிகளின் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் பல்வேறு சலுகைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்(Documents Required):

முதலில் இந்த திட்டத்திற்கு தேவைப்படும் ஆவணம் பாஸ்ப்போர்ட் போட்டோ 2. இந்த திட்டத்தில் கடன் பெற அடையாள சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள சான்றாக ஒப்படைக்க வேண்டும். அடுத்ததாக முகவரி சான்று, விவசாயம் வைத்திருப்பதற்கான நிலச்சான்று இருக்க வேண்டும்.

SBI வங்கி அறிவித்துள்ள விவசாய தங்கநகை கடன் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பக்க வேண்டும்?

இந்த திட்டத்தில் கடன் பெற நினைக்கும் விவசாயிகள் அருகில் இருக்கும் SBI வங்கி கிளையை அணுகவேண்டும்.

வங்கியில் இருக்கும் வங்கி அதிகாரியிடமிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளவும். விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொண்டதுடன் வங்கி லோனை பெறுவதற்கான வழிமுறையினையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

அடுத்து YONO செயலியின்(Apps) மூலமும் விவசாயிகள் அனைவரும் தங்க நகை கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் sbi.co.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

newசொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு மானியம்..! Sottu Neer Pasanam Subsidy..!
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil
Advertisement