ஸ்பைருலினா சுருள்பாசி வளர்ப்பு | Surul Pasi Cultivation in Tamil
Surul Pasi Valarpu in Tamil: விவசாய நண்பர்கள் அனைவருக்கும் பொதுநலம்.காம்-ன் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் சுருள்பாசி வளர்ப்பு முறையை பற்றி படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். சுருள்பாசி “ஸ்பைருலினா” என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றது. இந்த சுருள்பாசியானது கண்ணிற்கு தெரியாத நீலப்பச்சை நிறத்தை கொண்டு தண்ணீரில் வாழும் தாவரமாகும். இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இந்த சுருள்பாசியினை வைத்து அழகு சாதன பொருள்கள் தயாரிப்பதற்கும், கோழிகள் நன்றாக வளர்வதற்கு, பட்டுப்புழுவிற்கு உணவாகவும், மாடுகளுக்கு அதிகமாக பால் சுரப்பதற்கு இந்த சுருள்பாசியானது பயன்படுகிறது. சரி இப்போது இந்த சுருள்பாசியை யாரெல்லாம் சாப்பிடலாம், இதனுடைய வளர்ப்பு முறை, விற்பனை விவரம் அனைத்தையும் படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
விவசாயிகளுக்கு கைகொடுக்கும் பட்டுப்புழு வளர்ப்பு..! |
குறைந்த செலவில் அதிக வருமானம்:
சுருள்பாசியை குறைந்த செலவில் வளர்த்து அதிக அளவில் வருமானத்தை அடையலாம்.
தொழில் வகைக்கு ஏற்றது:
நம் நாட்டின் சூழலுக்கு ஏற்றது ஸ்பைருலினா மேக்ஸிமா, ஸ்பைருலினா பிளான்டெனிஸ்.
பல மிஷின்களை கொண்டு பெரிய பெரிய நிறுவனங்கள் மூலமாக வளர்ப்பதற்கு ஸ்பைருலினா மேக்ஸிமா ரகம் ஏற்றது. சிறுதொழில் செய்பவர்களுக்கு ஸ்பைருலினா பிளான்டெனிஸ் வகை சிறந்தது.
ஊட்டச்சத்து நிறைந்த சுருள்பாசி:
பாசியை உற்பத்தி செய்து பல வழிகளில் விற்பனை செய்து வரலாம். கால்நடை போன்றவைகளுக்கு சுருள்பாசியானது தீவனமாக கொடுப்பதன் மூலம் அதிகமாக வருமானத்தை இதில் பெறலாம்.
எதிர்காலத்தில் ஸ்பைருலினா சுருள்பாசிக்கு அதிகமாக வரவேற்பு இருக்கும். ஸ்பைருலினாவைப் பெரு முதலாளிகள் தொழிற்சாலை மூலம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வரலாம். விவசாயிகள் சிறுதொழில் மூலம் விற்பனை செய்யலாம்.
சுருள்பாசி வளர்க்கும் முறை:
சுருள்பாசி வளர்ப்பதற்கு முதலில் சமமான இடப்பகுதியில் 18 அடி நீளமும், 12 அடி அகலத்திற்கு நன்றாக இடத்தினை சுத்தம் செய்துகொள்ளவும். சுத்தம் செய்த இடத்தில் 1 இன்ச் அளவிற்கு மணலை பரப்பிவிட வேண்டும்.
அடுத்து நான்கு புறத்திலும் 2 அடி உயரத்துக்கு 12 கட்டைகளை நன்றாக ஊன்றி அதன் உள்பகுதியில் தார்ப்பாயை வைத்துக் கட்டைகளில் பாயை ஆணியால் அடித்துத் தொட்டியைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.
அடுத்ததாக 1/2 கிலோ கல் உப்பினை நீரில் நன்றாக கரைத்து தொட்டியில் தெளித்துத் தொட்டியைச் சுத்தம் செய்த பிறகு, ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட தண்ணீரைத் தொட்டியில் 23 செ.மீட்டருக்கு விட வேண்டும் (சுமார் 750 லிட்டர்).
சிறு தொழில் – காடை வளர்ப்பு மாத வருமானம் ரூ.30,000/- |
அதன் பிறகு அந்த தொட்டியில் 7,500 கிலோ பொட்டாசியம் பை கார்பனேடை ஒரு துடுப்பால் கலக்கவும். இதனுடன் 4,750 கிலோ கல் உப்பு, 190 கிராம் யூரியாவை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
ஒரு கிலோ ஃபெரஸ் சல்பேட், ஒரு லிட்டர் நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் போன்றவற்றை 10 லிட்டர் நீரில் நன்றாக கரைத்துத் தயாரிக்கப்பட்ட ஃபெரஸ் சல்பேட் கரைசலில் இருந்து 47.5 மி.லியும், 49.4 மி.லி. பாஸ்பாரிக் அமிலத்தையும் கையில் கிளவுஸ் அணிந்து கவனத்துடன் தொட்டியில் தெளித்துவிட வேண்டும்.
தண்ணீரின் பி.எச். அளவு 10.5-ம், தண்ணீரின் அடர்த்தி 1.010-லிருந்து 1.020 வரை இருக்க வேண்டும். பூனம் சேலையை இரண்டாக மடித்து அதில் 750 கிராம் உயிருள்ள தாய்ப்பாசியை இட்டுச் சுருட்டிப் பிடித்துக் கொண்டு, அதைத் தொட்டியிலுள்ள தண்ணீரில் ஆங்காங்கே மூழ்கச் செய்து பாசியை விடவேண்டும். தினமும் 10 முறை இதனை கலக்கி விடுவது அவசியம்.
இதன் தொடர்ச்சியில் சுருள்பாசியை எடுக்கும் முறை பற்றி தெரிந்துகொள்ளுவோம்..!
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | pasumai vivasayam in tamil |