வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் 6035 பணிகளுக்கு வேலைவாய்ப்பு

Advertisement

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2022 | IBPS Clerk Notification 2022

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection) தற்பொழுது இந்தியா முழுவதும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Common Recruitment Process for Recruitment of Clerks பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக மொத்தம் 6035 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 01.07.2022 முதல் 21.07.2022 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS Recruitment) வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள www.ibps.in
என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

IBPS Recruitment 2022 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்  வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection)
பணிகள்  CRP Clerk-XII
பணியிடம்  இந்தியா முழுவதும்
காலியிடம்  6035
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.07.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி  21.07.2022
அதிகாரபூர்வ இணையத்தளம்  ibps.in

கல்வி தகுதி:

 • அனைத்து பட்டதாரிகளும் இந்த அறிவிப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை அறிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 •  குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயது மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • வயது தளர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Online Preliminary & Online Main Examination, interview போன்ற தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பமுறை:

 • ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

 • SC/ ST/ PWBD பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 175/- செலுத்த வேண்டும்.
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 850/- செலுத்த வேண்டும்.
 • இந்த விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

IBPS வேலைவாய்ப்பு 2022 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. ibps.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கான அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. பின் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து விடவும்.
 5. விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
IBPS Clerk Notification 2022 DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement