சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021..! Vellore Recruitment 2021
Vellore Recruitment 2021:- வேலூர் மாவட்ட சமூகப்பாதுகாப்பு துறை தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த புதிய வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள ஒரு உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு முற்றிலும் தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. அதேபோல் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் காலியாக உள்ள மூன்று ஆற்றுப்படுத்துனர் (Counselors) பதவியை மதிப்பூதியம் அடிப்படையில் நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. அதேபோல் வேலூர் மாவட்ட ஆற்காடு சாலையிலுள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்கு முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் ஒரு சமையலர் (Cook) பணியை நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது.
எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 05.02.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும். அதேபோல் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். வேலூர் மாவட்ட சமூகப்பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://vellore.nic.in/ இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சரி இங்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை பற்றி படித்தறியலாம் வாங்க.
Vellore Recruitment 2021:-
நிறுவனம் | வேலூர் மாவட்ட சமூகப்பாதுகாப்பு துறை |
வேலைவாய்ப்பு வகை | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021 |
பணிகள் | கணினி இயக்குபவர், ஆற்றுப்படுத்துனர் மற்றும் சமையலர் |
மொத்த காலியிடம் | 05 |
பணியிடம் | வேலூர் |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 05.02.2021 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://vellore.nic.in/ |
காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள்:-
பணிகள் | காலியிடங்கள் எண்ணிக்கை | சம்பளம் |
கணினி இயக்குபவர் | 01 | ரூ.9,000/- |
ஆற்றுப்படுத்துனர் | 03 | ஒரு நாளைக்கு ரூ.1,000/- வீதம் |
சமையலர் | 01 | ரூ.10,000/- |
மொத்த காலியிடங்கள் | 05 |
கல்வி தகுதி:-
கணினி இயக்குபவர் பணிக்கு:
- 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- கணினி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கணினி இயக்குவதில் ஒரு வருடம் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆற்றுப்படுத்துனர் பணிக்கு:
- இப்பதவிக்கு உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சமையலர் பணிக்கு:-
- 08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:-
- கணினி இயக்குபவர், ஆற்றுப்படுத்துனர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்சவயது 40 ஆண்டுகள் மிகாமல் இருக்க வேண்டும்.
- சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 33 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:-
- நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இருப்பினும் தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள https://vellore.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.
விண்ணப்ப முறை:-
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:-
- கணினி இயக்குபவர் & சமையலர் பணிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில், வேலூர் 632001. வேலூர் மாவட்டம்
- ஆற்றுப்படுத்துனர் பணிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய அஞ்சல் முகவரி:
கண்காணிப்பாளர், அரசினர் குழந்தைகள் காப்பகம், ராஜீவ் காந்தி நகர், செங்குட்டை, காட்பாடி, வேலூர் 632007
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:
- vellore.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் Notices என்பதில் Recruitment என்பதை க்ளிக் செய்யவும்.
- தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள கணினி இயக்குபவர், ஆற்றுப்படுத்துனர் மற்றும் சமையலர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தினை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து, சரியாக பூர்த்தி செய்து 05.02.2021 அன்றுக்குள் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற | இங்கே கிளிக் செய்யவும் |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Vellore Recruitment 2021) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இன்றைய வேலூர் மாவட்ட செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil 2021 |