Budhan Palangal in Tamil
ஜோதிடங்களின் படி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு வகையான கிரகரங்கள் அதிபதியாக இருப்பது வழக்கம். அதேபோல் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு ராசியில் மாறி மாறி அமர்வது வழக்கம். ஆனால் இது மாதிரி மாறி வருவதால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு வகையான மாற்றம் ஏற்படுகிறது. அது சில ராசிக்கு நல்ல பலன்களை அளிக்கும். சில ராசிக்கு கொஞ்சம் நேருக்கு மாறாக நடக்கும். அதேபோல் இந்த வகையில் புதன் பகவான் ரிஷப ராசியில் அமர்கிறார். அதாவது பேச்சு, வணிகம், பொருளாதாரத்தில் தாக்கம் அதிகமாக இருக்காது. அதேபோல் புதன் பகவானை கிரகங்களின் இளவரசன் என்பார்கள். ஆகவே இப்போது மேஷராசியில் பயணித்து வருகிறார். அதன் பின்பு ஜூன் 7 முதல் ரிஷப ராசியில் பயணிக்க உள்ளார். ஆகவே என்ன பலன்களை தருகிறார் என்று பார்க்கலாம் வாங்க..!
Budhan Palangal in Tamil
மீனம் ராசி | Pisces Rasi in Tamil
மீன ராசிக்கு புதன் பகவான் 3 ஆம் வீட்டிற்கு செல்கிறார். இதனால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். இதனால் வாகனம், சொத்து வாங்கும் நிலைக்கு வருவீர்கள். இது நல்ல வாய்ப்பாக இருக்கும். தாயின் உடல் நலன் நன்றாக இருக்கும். அதேபோல் தைரியம், பொறுமை அதிகமாக காணப்படும். பணிபுரிபவர்கள் உங்களின் வேலைகளை மாற்ற நினைத்தால் அது உங்களுக்கு நல்ல பலன்னை அளிக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
இந்த ராசிக்காரர்கள் மே 30 வரை காத்திருக்கவும்..ஏனென்றால் பணமழை பொழிய போகிறது
மகரம் ராசி | Capricorn Rasi in Tamil
மகர ராசியின் 5 ஆம் வீட்டிற்குள் செல்கிறார். இந்த காலத்தில் எது செய்தாலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். முக்கியமாக நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த குறையும் இருக்காது. முன்பு முதலீடு செய்தவை மூலம் இப்போது நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகள் வழியில் நல்ல நிலை கிடைக்கும். காதல் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
கன்னி ராசி | Virgo Rasi in Tamil
கன்னி ராசியின் 9 ஆம் வீட்டிற்குள் புதன் பகவான் செல்கிறார். இதனால் தனிப்பட்ட ஆளுமையில் நல்ல மாற்றங்களை காணமுடியும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வீசும். தொழிலை பொறுத்த வரையில் எந்த குறையும் இருக்காது. நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த காரியங்கள் கூட உங்களுக்கு சாதகமாக முடியும். பணிபுரிபவர்களுக்கு கூட ஊதிய உயர்வு கிடைக்கும். அதிக முதலீடு செய்து தொழில் செய்பவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |