Guru Peyarchi 2023 Palangal in Tamil
ஆன்மிக நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.. ஏப்ரல் 22-ஆம் தேதி குருபெயர்ச்சி ஆகியுள்ளார். குரு பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பார்வை கோடி நன்மை என்று சொல்லப்படுகிறது. குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் தான் கோடி நன்மை நிகழும்.. அந்த வகையில் இந்த பெயர்ச்சியில் குருபகவான் மேஷம் ராசியில் பயணம் செய்கிறார். ஆக குருவின் பார்வை இந்த பெயர்ச்சியில் சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. ஆக இந்த ராசிக்காரர்களுக்கு குருபகவான் பல நன்மைகளை வாரிவழங்க உள்ளார். சரி பெயர்ச்சி 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
குரு பெயர்ச்சி பலன் மேஷ ராசி – Guru Peyarchi 2023 Palangal Mesham:
மேஷம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம குருவாக இருப்பதால் 5-ஆம் இடம் பூர்வபுண்ணிய ஸ்தானமும், 7-ஆம் இடம் என்பது களத்ர பாவமும், 9-ஆம் இடம் என்பது பாக்கிய ஸ்தானமும் ஆகிய இடங்களை குறு பார்ப்பதால் இவர்களுக்கு அக்டோபர் புதிய வேலைவாய்ப்பு, புதிய வாழ்கை, புதிய பயணம் ஆகியவை உண்டாகும்.
பரிகாரம்:
வாயில்லா உயிரினங்களுக்கு இந்த ஆண்டு தானம் செய்வது அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
குரு பெயர்ச்சி பலன் ரிஷபம் ராசி – Guru Peyarchi 2023 Palangal Rishabam:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு 12-ஆம் இடத்தில் குரு இருப்பதால் இவர்களுக்கு செய்யும் தொழிலில் இடம் மாற்றம், அதிக சம்பளம், மன நிம்மதி என்று சுப பலன்களாக தான் இருக்கும். அதேபோல் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இது ஒரு சுமாரான பலனாக இருந்தாலும், ஒளிமயமான ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும்.
பரிகாரம்:
நாக புற்றுக்கு பால் வைத்து புற்றின் மீது குங்குமமும் மஞ்சளும் தெளித்து தொடர்ந்து மூன்று வாரம் செய்து வந்தாலே நல்ல பலன்கள் உண்டாகும்.
குரு பெயர்ச்சி பலன் மிதுனம் ராசி – Guru Peyarchi 2023 Palangal Midhunam:
இது வரை மிதுனம் ராசிக்காரர்களுக்கு 10-ஆம் இடத்தில் இருந்த குரு இந்த பெயர்ச்சியில் 11-ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அதாவது லாப ஸ்தானத்திற்கு வருகிறார். இவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் இருந்து புதிய வேலை, புதிய பயணம், புதிய வாழ்கை, சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம், அதிகமான வருமானம், மன நிம்மதி என்று சுப பலனாக நடக்கும்.
பரிகாரம்:
காலை எழுந்தவுடன் கோயில்களில் உள்ள தலைவிரிச்சங்களுக்கு, நந்தவனத்தில் உள்ள செடி, கொடி, மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது நல்ல பலன்களை கொடுக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தோஷம் வகைகள் மற்றும் பரிகாரம்
குரு பெயர்ச்சி பலன் கடகம் ராசி – Guru Peyarchi 2023 Palangal Kadagam:
கடகம் ராசிக்காரர்களுக்கு குரு உங்கள் ராசியில் 5-ஆம் வீட்டில் இருந்து 2-ஆம் வீட்டை பார்க்க போகிறார் ஆக இந்த கால கட்டத்தில் மலை போல் வரும் பிரச்சனைகள் பனி போல் மாறப்போகிறது.
பரிகாரம்:
பக்கத்தில் இருக்கும் குரு கோயில், சீரடி சாயிபாபா, ராகவேந்திரா கோயில் இது போன்ற கோயிகளுக்கு சென்று வருவது நல்லது.
குரு பெயர்ச்சி பலன் சிம்மம் ராசி – Guru Peyarchi 2023 Palangal Simmam:
சிம்மம் ராசிக்காரர்களுக்கு கண்டக சனி முடிவடைந்தாலும் குரு 5-ஆம் இடத்தை பார்க்கிறார். இவர்களுடன் இருபவர்களினாலே பிரச்சனை வரும். ஏன் என்றால் 5-ஆம் பார்வை இருந்தாலும் அதிக சம்பளம், மன நிம்மதி, சந்தோசம், செய்யும் தொழிலில் மேன்மை எல்லாம் இருந்தாலும், பொது துறையில் இருப்பவர்கள் உடல் நலத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் ராகு கேது அக்டோபர் மாறப்போவதால் பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்:
உங்கள் ஊரில் பக்கத்தில் இருக்கும் குரு கோயிலுக்கு வியாழன் கிழமை தோறும் எலுமிச்சையில் தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்தது அல்லது நெய் தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்தது.
குரு பெயர்ச்சி பலன் கன்னி ராசி – Guru Peyarchi 2023 Palangal Kanni:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சிறந்த பலன்களை கொடுக்காது என்றாலும். குருவினுடைய பார்வை 12-ஆம் இடத்தில் 5-ஆம் பார்வையும், 7-ஆம் பார்வையாக 2-ஆம் வீடான துலாம் ராசியில் விழுவதினால் குடும்பம், வாக்கு, தனஸ்தானத்தில் நிம்மதி கிடைக்கும். அதேபோல் 12-ஆம் இடத்தில் வருமானம், சுப விரையம் ஏற்படும். ஆக இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு வரவுக்கும், செலவுக்கும் சரியாக போய்விடும்.
பரிகாரம்:
ஒருமுறை திட்டையில் உள்ள குரு கோயிலுக்கு சென்று வரவும் அல்லது கங்கையில் குளித்துவிட்டு வரவும் இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மேலும் இதன் தொடர்ச்சியை அதுத பதிவில் படித்தறியலாம் நன்றி வணக்கம்..!
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்கள் அம்மா வீட்டிலிருந்து இந்த பொருட்களை மட்டும் தெரியாமல் கூட எடுத்துட்டு போகவே கூடாதாம்..
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |