Who Will Get Lucky Due To Saturn Rising in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! நாம் இன்று நம் ஆன்மீகம் பதிவின் வாயிலாக ஒரு அருமையான தகவலை தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக நம் ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கும் மொத்தம் 3 நட்சத்திரங்கள் இடம் பெயர்கின்றன. அதுபோல ராசிகளில் கிரகங்களின் மாற்றம் என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி கிரகங்களின் மாற்றத்தால் சில ராசிகளுக்கு நன்மைகளும், சில ராசிகளுக்கு தீமைகளும் நடைபெறுகின்றன. அதுபோல அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக இருப்பவர் தான் சனிபகவான்.
இவரை நாம் நீதியின் கடவுள் என்று அழைக்கின்றோம். அதாவது இவ்வுலகில் வாழும் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ற படி பலன்களை வழங்கும் நீதிமானாக இருப்பவர் தான் சனிபகவான். இதனை தொடர்ந்து சனி பகவான் இதுவரை தன்னுடைய சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். இந்த ஆண்டு முழுவதும் அவர் கும்ப ராசியில் தான் இருப்பார். அதுபோல பிப்ரவரி 11 ஆம் தேதி சனிபகவான் அஸ்தமன நிலைக்கு சென்றார். அதனை தொடர்ந்து இன்னும் 5 நாட்களில் அதாவது மார்ச் 18, 2024 அன்று கும்ப ராசியில் உதயமாகப் போகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மழையாக கொட்டப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
கும்பத்தில் செவ்வாய் பெயர்ச்சி..! 12 ராசிகளும் எப்படி இருக்கும்..
சனியின் உதயத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்..?
தனுசு ராசி:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் உதயத்தால் அதிகளவு நன்மைகள் கிடைக்கப்போகிறது. தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த நேரத்தில் புதிய வேலையைத் தொடங்கலாம். மேலும் வேலை தொடர்பாக நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். சனியின் உதயத்தால் இந்த நேரத்தில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.
கன்னி ராசி:
சனியின் உதயத்தால் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பல நற்பலன்கள் கிடைக்கப்போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீங்கள் தொடும் அனைத்து செயல்களிலும் வெற்றி உண்டாகும். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை அந்த நரத்தில் அனுபவிப்பீர்கள். உங்கள் தொழில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.
செவ்வாய் பெயர்ச்சியால் 2024-ம் ஆண்டு பணம் கொட்டி கொண்டே இருக்க போகிறது இந்த 3 ராசிகளுக்கு..
துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனியின் உதயத்தினால் பல அதிர்ஷ்டகரமான பலன்கள் கிடைக்கப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த நேரத்தில் உங்களை தேடி பல புதிய வாய்ப்புகள் வரும். நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களை நீங்கள் பெறுவீர்கள்.
மேஷ ராசி:
சனியின் உதயத்தால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு பல நற்பலன்கள் கிடைக்கப்போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாக காணப்படும். இந்த நேரத்தில் அரசு வேலை உங்களை தேடி வரும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் இந்த நேரத்தில் உண்டாகும். சனியின் உதயத்தினால் பணவரவு அதிகமாக காணப்படும். அதனால் பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.
2024-ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழ போகிறார்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |