மார்பக நீர்க்கட்டி அறிகுறிகள் | Lump in Breast Symptoms in Tamil

Lump in Breast Symptoms in Tamil

மார்பக நீர் கட்டி அறிகுறிகள், காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சை

Lump in Breast Symptoms in Tamil:- மார்பகத்தில் ஏற்படும் எல்லா கட்டிகளும் மார்பக புற்றுநோய் என்று கூறிவிட  முடியாது. சில கட்டிகள் புற்றுநோய் அற்ற கட்டிகளாக கூட இருக்கலாம். ஆகவே உங்கள் மார்பகத்தில் ஏற்படும் கட்டிகளை கண்டு பயப்பட வேண்டாம். மார்பக கட்டி எனப்படுவது மார்பகத்தில் வளரும் அசாதாரண திசு வளர்ச்சி ஆகும். அவைகள் வட்ட வடிவிலோ அல்லது ஒழுங்கற்ற வடிவத்திலோ, வலியுடையதாகவோ அல்லது வலி அற்றதோ, மென்மையாகவோ அல்லது உறுதியாகவோ, புண்ணுடன் கூடியதாகவோ அல்லது இல்லாமலோ புற்று நோய் உடையதாகவோ அல்லது புற்றுநோய் இல்லாமலோ தோன்றலாம். அதனால் நீங்கள் மார்பக கட்டிய கண்டால் அதனை நினைத்து கவலையடையாமல் உடல் நல மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்வது நல்லது. சரி இந்த பதிவில் மார்பக நீர்க்கட்டி அறிகுறிகள், மார்பக கட்டி ஏற்பட காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

புற்று நோய்யற்ற மார்பக நீர்க்கட்டி:

ஃபைப்ரோடெனோமா:

பெண்களை பாதிக்கும் மிக பொதுவான ஒரு மார்பக கட்டியின் வகை ஆகும். ஃபைப்ரோடெனோமாவில் மார்பகத்தின் ஃபைரசஸ் மற்றும் க்ராண்டுளர் திசுக்கள் இரண்டும் அசாதாரணமாக வளர்ச்சி அடையும். இவை மென்மையான தகவோ அல்லது திடமாகவோ தோன்றலாம் எளிதில் நகர்ந்திட கூடியவை. இது மார்பகத்தின் மத்த திசுக்களுடன் இணையாமல் இருக்கக்கூடியவை.

சிச்ட்ஸ் (கட்டிகள்):

நீர்க்கட்டிகள் மென்மையானவை, திரவ நிறைந்த பை போன்ற வளர்ச்சி அடைந்த இவை, பெரும்பாலும் வட்ட வடிவத்தில் உள்ளவை இவைகள் மார்பில் ஒரு சிறிய வலியை உண்டாக்கலாம்.

ஃபைப்ரோசிச்டிக் நோய்:

மார்பகத்தில் ஏற்படும் ஃபைப்ரோசிச்டிக் நோய், மூன்று வகையான திசு சேதம் உண்டாக்கும், கட்டிகள் உருவாகுவது ஃபைப்ரோஸிஸ் (ஃபைப்ரோஸ் திசுக்களின் அசாதாரண வளர்ச்சி), மார்பக சுரப்பிகளின் திசுக்களின் அசாதாரண வளர்ச்சி.

அப்செச்செஸ்:

மார்பகத்தில் தொற்று வருவதனால் அப்செச்செஸ் உண்டாகுகிறது. இது சில சமயம் மார்ரபாக தோலின் புண்ணுடன் சம்பந்தப்பட்டு இருக்கும். அவை வலி மற்றும் அசௌகர்யம் தர கூடியவை. அப்செச்செஸ் பொதுவாக பாலூட்டும் பெண்களை பாதிக்கும்.

அடேநோமா:

அடேநோமஸ், மார்பகத்தின் சுரப்பியின் உள்புறத்தில் அல்லது வெளிப்புறத்தில் அசாதாரணமாக வளர்ந்து வரும் கட்டிகள் ஆகும்.

பாபில்லோமா:

பால் குழாய்களின் உள்ளேயும் வெளியேயும் வளரும் சிறிய விரல்களை போல் வடிவம் கொண்ட வளர்ச்சியை பாபில்லோமா என்று அழைக்க படுகிறது . முளைக்காம்புகளிலிருந்து திரவியம வெளியேற்றத்துடன் தோன்றலாம் . இந்த திரவியத்தில் சிறிதளவு இரத்த கசிவு காணப்படலாம்.

லிபோமா மற்றும் கொழுப்பு திசு அழுகல்:

மார்பக கொழுப்பு கட்டி: லிபோம எனப்படுவது மர்பகதினும் கொழுப்பு திசுக்களின் அசாதாரண வளர்ச்சியாகும். கொழுப்பு நெக்ரோசிஸ். கொழுப்பு திசு அழுகல், மார்பகத்தின் கொழுப்பு திசு அழிந்து கரைய ஆரம்பித்துவிட்டால் ஏற்படும் ஒரு நிலமை ஆகும்.

மார்பக கொழுப்பு கட்டி அறிகுறிகள் – Lump in Breast Symptoms in Tamil:

  • மற்றொன்டை ஒப்பிடுகையில் திடீரென்று ஒரு மார்பகத்தின் அதிக வளர்ச்சி.
  • ஆரஞ்சு பழ தோல் போன்ற அமைப்பு மார்பக காம்பை சுற்றி உள்ள தோலில் மற்றும் மாரபாக பகுதியில் தென்படலாம்.
  • ஒன்று அல்லது இரண்டு காம்புகளின் சுற்றியுள்ள பகுதியில் ஒரு அசாதாரண மாற்றம்.
  • மார்பக காம்பிலிருந்து வெளிவரும் திரவியம் தண்ணீர் போன்றோ, வெளீர் மஞ்சள் நிறத்திலோ, பச்சையாகவோ, பழுப்பு அல்லது சிவப்பு நிறத்திலோ தோன்றும்.
  • பெரும்பாலும் சிவப்பு நிற வெளியேற்றம் இரத்தமாக இருக்கும் அதனால் மருத்துவரை உடனே அணுகுவது அவசியம்.
  • ஒன்றோ அல்லது இரண்டு மார்பிலும் குழியோ அல்லது பள்ளம் தோன்றுதல்
  • ஒன்றோ அல்லது இரண்டு மார்பும் கனமானது போல ஒரு உணர்வு
  • எடை இழப்பு மற்றும் பசி இழப்பு
  • மார்பகத்தில் பெரிய வட்டமான கட்டி அல்லது மென்மையான உழுங்கற்ற உருவமுள்ள கட்டி தோன்றுதல்.

மார்பக நீர் கட்டி ஏற்பட காரணங்கள்:

இரத்த ஓட்டத்தில் ஏற்கனவே இருந்த தொற்றிநாலோ அல்லது மார்பக காம்புகளில் வழியாக சென்று மார்பக திசுக்களில் நோய் தொற்று ஏற்படுத்துவதனால் மார்பக கட்டி உண்டாக்கிறது. அக்குளில் தொற்று உண்டானால் அதன் காரணமாக உங்கள் மார்பகங்களில் தொற்று ஏற்படலாம்.

மார்பக திசுக்களின் வீக்கம், வலி அல்லது அசௌகரியம் ஏற்படுத்தும்.

திடீரென்ற மார்பகத்தில் ஏற்படும் அடி அல்லது காயத்தினால், கட்டி உருவாகி, மார்பக தோற்று மற்றும் வீக்கம் உண்டாகுகிறது.

நீங்கள் ஏதேனும் புற்று நோய்க்கான சிகிச்சை எடுத்திருந்தால், உங்கள் மார்பக செல்கள் கதிர்வீச்சினால் சேதமடைந்த பின்னர் அசாதாரண வளர்ச்சி ஏற்படலாம்.

சில வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் மார்பக செல்களை மாற்றி அமைத்து அவற்றின் அசாதாரண வளர்ச்சிக்கு காரணமாகலாம். இவற்றில் மனித பாப்பிலோமாவைரஸ் (hpv), எப்ஸ்டீன்-பார் வைரஸ் மற்றும் போயீன் லுகேமியா வைரஸ், ஆகியவை அடங்கும்.

மார்பக கட்டியின் சிகிச்சை – Breast Lump Treatment in Tamil:

உங்கள் மார்பக கட்டியின் அடிப்படை காரணத்தை அறிந்து கொண்டு உங்கள் மருத்துவர், அந்த நிலைமையை சரி செய்ய அதற்கேற்ற மருந்துகளை பரிந்துரை செய்வார்.

உங்கள் மார்பக கட்டியின் அடிப்படை காரணம் ஒரு நோய்தொற்று அல்லது அழற்சியாக (வீக்கம்) இருந்தால் உங்கள் மருத்துவர் அண்டிபயொடிக்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆகிய மருந்தை பருந்துரை செய்வார்.

இதை தவிர பிரச்சனையின் நிலையை பொறுத்து கீமொதேரபி, கீமொதேரபி, அறுவை சிகிச்சை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சிகிச்சை முறையை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்.

மேலும் லம்பெக்டோமி, மாஸ்க்டேக்டோமி ஆகிய சிகிச்சை முறைகள் மருத்துவர்களினால் மேற்கொள்ள படுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health tips tamil