Summer Drinks for Diabetics in Tamil
பொதுவாக கோடை காலம் வந்து விட்டாலே போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மூன்று வேலையும் உணவு உட்கொள்கிறோமோ இல்லையோ, தண்ணீர் அதிகமாக குடித்து கொண்டே இருப்போம். வெயில் காலத்தில் தாகம் அதிகமாக இருக்கும். இதனால், குளிர்பானங்களை அதிகமாக குடிப்போம். ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டும் எதுவாக இருந்தாலும் பார்த்து பார்த்து சாப்பிட வேண்டும். அவர்களுக்கு, ஏற்ற ஜூஸ் வகைகள் பற்றி இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
உடலில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் சர்க்கரை இல்லாத பானங்களை உட்கொள்ள வேண்டும். எனவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கக்கூடிய ஜூஸ் வகைகளை இப்பதிவின் மூலம் படித்து தெரிந்துகொண்டு பயனடையுங்கள்.
Summer Drink Recipes for Diabetics in Tamil:
இளநீர்:
கோடை காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு இளநீர் ஒரு சிறந்த பானம் ஆகும். இயற்கையாகவே கிடைக்கக்கூடிய இளநீரில் 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. இளநீரில் பொட்டாசியம், அமினோ அமிலங்கள், நொதிகள், பி வைட்டமின்கள், மெக்னீசியம், இரும்பு மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை உள்ளது. இளநீரில் உள்ள சத்துக்கள் சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. முக்கிமாக இதில் நீர்ச்சத்து அதிகம் என்பதால் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது.
விளாம்பழம் ஜூஸ்:
விளாம்பழம் ஜூஸ் சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும், வெயில் காலத்திற்கு ஏற்ற பானமாகவும் இருக்கிறது. செரிமான பிரச்சனையை சரி செய்கிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் இதனை உட்கொள்ளலாம்.
மோர்:
மோர் நம் உடலிற்கு எவ்வளவு நல்லது என்பது நம் அனைவருவருக்கும் தெரியும். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் தினமும் மோர் எடுத்துக்கொள்வது நல்லது.
புதினா ஜூஸ்:
புதினா ஜூஸ் கோடை காலத்திற்கு சிறந்த பானம் ஆகும். அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பதினாவில் எந்தவொரு சர்க்கரையும் இல்லாததால் புதினா ஜூஸ் எடுத்து கொள்ளலாம்.
எலுமிச்சை சாறு:
சர்க்கரை நோயாளிகள் எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்க்காமல் உப்பு சேர்த்தோ அல்லது வெறும் எலுமிச்சை சாற்றை மட்டுமே சாப்பிட வேண்டும். கோடை காலத்தில் உடலிற்கு மிகவும் நல்லது எலுமிச்சை சாறு.
லஸ்ஸி:
சர்க்கரை நோயாளிகள் தயிர், கருப்பு உப்பு, புதினா துளிர் மற்றும் சீரகத் தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து குடித்து வரலாம். இது உப்பு லஸ்ஸி என்றும் அழைக்கப்படுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |