Andhra Paruppu Podi Recipe in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நம் அனைவருக்குமே ஆந்திரா ஸ்டைல் உணவுகள் அனைத்தும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக ஆந்திரா என்றால் திருப்பதி லட்டும், பருப்பு பொடி தான் நம் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு மிகவும் பிரபலமானது ஆந்திரா உணவு வகைகள். பருப்பு பொடி செய்து வைத்துக்கொண்டு சூடான சாதத்தில் போட்டு நெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.
இதற்காகவே, பலபேர் வீட்டில் பருப்பு பொடி தீராமல் பார்த்துக்கொள்வார்கள். அந்த வகையில் நீங்கள் வீட்டிலேயே ஆந்திர ஸ்டைலில் பூண்டு பருப்பு பொடி செய்ய விரும்பினால், இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவில் ஆந்திரா ஸ்டைல் பூண்டு பருப்பு பொடி செய்வது எப்படி.? என்பதை விவரித்துள்ளோம்.
ஆந்திரா ஸ்டைல் பூண்டு பருப்பு பொடி செய்வது எப்படி.?
Ingredients
- துவரம் பருப்பு - 3/4 கப்
- பூண்டு - 6 பற்கள்
- பொட்டுக்கடலை - 1/2 கப்
- காய்ந்த குண்டு மிளகாய் - 6
- காய்ந்த காஷ்மீர் மிளகாய் - 2
- கருவேப்பிலை - 2 கொத்து
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
- பெருங்காய தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகு - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
Instructions
How to Make Paruppu Podi Andhra Style in Tamil:
- முதலில் பருப்பு பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள். இப்போது, பூண்டு பற்களை தோலுடன் லேசாக இடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- அதன் பிறகு, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, இடித்து வைத்துள்ள பூண்டினை சேர்த்து லேசாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
- அடுத்து, அதே கடாயில் துவரம் பருப்பு, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து கொள்ளுங்கள். துவரம்பருப்பு பொன்னிறமாக வந்ததும், அதனுடன் காய்ந்த சிவப்பு குண்டு மிளகாய், காய்ந்த காஷ்மீரி சிவப்பு மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
- நன்கு வறுபட்டதும், இதில் பொட்டுக்கடலை சேர்த்து லேசாக வறுத்து, அடுப்பை ஆஃப் செய்து கொள்ளுங்கள்.
- வறுத்த பொருட்களை எல்லாம், ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் சேர்த்து வறுத்து வைத்துள்ள பூண்டு, பெருங்காய தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி ஆறவிடுங்கள்.
- இவை நன்றாக ஆறியதும், ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
- அவ்வளவு தாங்க. ஆந்திரா ஸ்டைல் பூண்டு பருப்பு பொடி தயார்.!
ஆந்திரா ஸ்டைல் வேர்கடலை சட்னி ஒரு முறை செய்து பாருங்க..
-
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link