யாருக்கெல்லாம் சொத்தில் உரிமை இல்லை தெரியுமா..?

right on property no has been in tamil

சொத்து யாருக்கு

பொதுவாக சொத்து என்றால் அது அனைவருடைய வீட்டிலும் உள்ள பொதுவான ஒன்று. ஆனால் சிலர் வீட்டில் பூர்வீக சொத்து மற்றும் அப்பா சம்பாதித்த, தாத்தா சம்பாதித்த சொத்து என்று பலமுறையில் இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வீட்டிலும் சொத்து பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போது இருக்கும் காலகட்டத்தை பொறுத்தவரை பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை இருப்பதால் ஒரு சொத்தினை பிரித்து கொடுப்பதற்குள் ஒரு பெரிய பிரச்சனை வந்துவிட்டு செல்கிறது என்று தான் கூற வேண்டும். பொதுவாக சொத்து என்றால் அதில் உரிமை உண்டு என்று தான் சிலருக்கு தெரியும். ஆனால் அப்படி கிடையாது. சொத்தில் சிலருக்கு உரிமை என்பதே இல்லை. அதனால் யாருக்கெல்லாம் சொத்தில் உரிமை என்பது இல்லை என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தலாம் வாருங்கள்.

வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம் தெரியுமா..?

யாருக்கெல்லாம் சொத்தில் உரிமை இல்லை:

ஒரு சொத்தில் யாருக்கெல்லாம் உரிமை கிடையாது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்து குழந்தை இல்லாத பெண்:

திருமணம் முடிந்த பெண்ணக்கு அவளுடைய அப்பா வீட்டில் இருந்து சொத்து கொடுத்து இருக்கும் பட்சத்தில் அந்த பெண் இறந்து போய்விட்டால் என்றால் அந்த சொத்தினை யாரும் உரிமை கொள்ள முடியாது. ஏனென்றால் அந்த பெண்ணுக்கு குழந்தைகள் எதுவும் இருந்தால் அவர்கள் அந்த சொத்தினை எடுத்துக்கொள்ளலாம் அப்படி இல்ல என்றால் அந்த சொத்து மீண்டும் அப்பா வீட்டிற்கு தான் சேரும்.

தந்தையை கொன்ற மகன்:

ஒரு மகன் அவனுடைய அப்பாவை கொன்று விட்டால் அவனுக்கு சொத்தில் எந்த விதமான உரிமையும் கிடையாது.

விதவை மனைவி:

கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்து கொண்டாள் என்றால் அவளுடைய முன்னாள் கணவனின் பூர்வீக சொத்தில் உரிமை கொண்டாட முடியாது என்றும் அதற்கான உரிமை இல்லை என்றும் கூறுபடுகிறது.

பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா..?

கூட்டு சொத்தினை ஒருவர் மட்டும் உரிமை கொள்ள முடியாது:

அதுபோல குறிப்பிட்ட நபர்களுக்கு கூட்டு சொத்தாக உள்ள ஒரு சொத்தினை ஒரு நபர் மட்டும் அவருக்கு என்று உள்ள ஒரு பகுதியினை உரிமை என நினைத்து விற்கு முடியாது. ஏனென்றால் அதில் அவருக்கு மட்டும் உரிமை கிடையாது அவருடன் பிறந்த அனைவருக்கும் உரிமை உள்ளது.

வயிற்றில் உள்ள குழந்தை:

கணவன் இறந்து கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளுடைய வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தந்தை வழி பூர்வீக சொத்தில் உரிமை உண்டு. அதுவே அந்த குழந்தை வயிற்றில் இருக்கும் போதே இறந்து பிறந்துவிட்டது என்றால் தந்தை வழி சொத்தில் உரிமை இல்லை.

ஆகவே மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் சொத்தில் உரிமை கொள்ள முடியாது. அதுவே ஒரு பூர்வீக சொத்திற்கு உயில் இருந்தது என்றால் அந்த உயில்படியே சொத்துக்களை பிரித்து எடுத்துகொள்ளலாம்.

அப்பா சொத்து மகனுக்கா.! மகளுக்கா.! யாருக்கு சொந்தம்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil