Neem Tree Types of Business in Tamil
நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவின் மூலம் வீட்டில் உள்ள மரத்தை வைத்து என்ன தொழில் செய்யலாம் என்று பார்க்கலாம். மரத்தை வைத்து என்ன தொழில் செய்யப் போகிறோம் என்று உங்களுக்கு கேள்வியாக இருக்கும்..! அந்த மரமானது அனைவருக்கும் உதவியாக இருக்கும். அதேபோல் இந்த மரத்தை வீட்டில் வளர்த்தால் அதனை சுவாசிப்பதன் மூலம் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும்.
அந்த மரமானது அனைவரின் வீட்டிலும் இருக்கும். அது என்னவென்றால் வேப்பமரம். இந்த மரமானது வளரும் போதும் சரி மனிதர்களுக்கு தொல்லை கொடுக்காது. அதாவது தண்ணீர் ஊற்ற அவசியம் இல்லை. அது தானாகவே வளர்வதற்கு வாய்ப்பு உண்டு. அது என்ன என்று பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 👇 https://bit.ly/3Bfc0Gl |
Neem Tree Types of Business in Tamil
பொதுவாக சிலர் என்ன தொழில் செய்யலாம் சொந்த தொழில் செய்வது என்றால் அனைவருக்கும் அதிக பணம் தேவைப்படும் அதேபோல் அதிகம் படித்திருக்கவேண்டும் என்று நிறைய கேள்விகள் மனதில் கேள்விகள் ஓடிக்கொண்டு தான் உள்ளது. ஆனால் இந்த தொழில் செய்ய படித்திருக்கவேண்டிய தேவை இல்லை. அதிக முதலீடு தேவையில்லை. கொஞ்சம் முதலீடு செய்தால் போதுமானது. சரி வாங்க அது என்ன என்று பார்க்கலாம்.
வேப்பங்குச்சி தொழில்:
வேப்பமரத்தை வைத்து நிறைய தொழில் செய்யலாம். முதலில் வேப்பங்குச்சியை வைத்து நாம் ஆன்லைன் மூலம் கூட சம்பாதிக்கலாம். முதலில் நாம் வேப்பங்குச்சியில் தான் பல் துலக்குவோம். ஆனால் இப்போது அப்படி யாரும் செய்வதில்லை. வேப்பம் குச்சியில் பல் துலக்குவதால் நம்முடைய பள்ளுக்கு நல்ல வலிமை கிடைக்கும். அதனால் தான் இப்போது அதனை அனைவரும் வாங்கி அதனை பயன்படுத்தி வருகிறார்கள். ஆகவே இதனை நாம் ஒரு தொழிலாக செய்யலாம். வேப்பங்குச்சியை உடைத்து அதனை சம அளவு நறுக்கி பாக்சியில் போட்டு கடைகளுக்கு கொடுக்கலாம். அதேபோல் இதனை நாம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம்.
இந்த தொழிலில் இவ்வளவு வருமானமானு தோனுதா.. அப்போ லாபத்தை கொஞ்சம் யோசிங்க..
வேப்ப எண்ணெய்:
வேப்ப எண்ணெய் நம்முடைய தேவையை அதிகமாக பூர்த்தி செய்து வருகிறது. ஆகவே இதனை நாம் ஒரு தொழிலாக செய்யலாம். அதேபோல் இதனை நாம் கடைகளுக்கு, ஆன்லைன் மூலமும் விற்கலாம். இந்த தொழில் செய்வதற்கு அதிக முதலீடு தேவையில்லை. குறைந்த முதலீடு போட்டு நிறைய லாபம் பார்க்கலாம்.
வேப்பிலை பவுடர்:
வேப்பிலை பவுடர் இந்த பவுடர் நிறைய நபர்கள் தலை முடிக்கு பயன்படுத்துவார்கள். அதேபோல் முகத்திற்கும் அதிகம் நபர்கள் பயன்படுத்துவார்கள். இந்த பவுடர் அனைவருக்கும் கிடைக்கும். ஆனால் அதிகமாக ஆன்லைன் மூலம் தான் வாங்குவார்கள். இது கடைகளில் அதிகம் கிடைக்காது. ஏனென்றால் அதன் தேவையானது மிகவும் குறைவு. இனி அதனுடைய தேவையானது அதிகம் இருக்கும். ஆகவே வேப்பிலை பவுடர் தொழில் செய்வது நல்லது. இந்த முறையில் நீங்கள் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதன் முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்👇👇
சும்மா கிடைக்கிற பொருளை பயன்படுத்தி வாரம் 3,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |