தினமும் 4,950 ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை மட்டும் செய்தால் போதும் உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது..!

சிறு தொழில்

அன்றாட வாழ்க்கையினை பொறுத்தவரை பணம் என்பது அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. அத்தகைய பணத்தை சம்பாதிப்பதற்கு வீட்டில் இருந்து ஒருவராவது கண்டிப்பாக வேலைக்கு செல்ல வேண்டும். ஒரு சிலர் வீட்டில் கணவன் மனைவி என இருவரும் வேலைக்கு செல்வார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டில் உள்ள ஒருவர் வேலைக்கு சென்றால் மற்றொருவர் வீட்டில் இருந்து கொண்டே சொந்தமாக ஒரு சிறுதொழிலை ஆரம்பித்து அதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம். அவ்வாறு வருமானம் பெறுவதற்கு உங்களுக்கு என்ன செய்வது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே இன்றைய பதிவில் சொல்லப்பட்டுள்ள தொழில் என்ன அதனை எப்படி செய்வது என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Made Business Ideas:

 சிறு தொழில்

தினமும் கை நிறைய சம்பாதிப்பதற்கு அதிக டிமாண்ட் உள்ள தொழில்களில் ஒன்றான Red Chilli Powder Business-ஐ பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த தொழிலை நிறைய நபர்கள் செய்து இருந்தாலும் கூட மற்றவர்களை விட அதிக லாபம் மற்றும் அதிக வருமானம் பெறுவது எப்படி தான் பார்க்கப்போகிறோம்.

முதலீடு | மூலப்பொருள்:

  1. காய்ந்த மிளகாய்
  2. Zip Louck Pouch

நீங்கள் இந்த Red Chilli Powder Business-ஐ செய்ய வேண்டும் என்றால் அதற்கு தோராயமாக 1,000 ரூபாய் முதலீடு இருந்தால் மட்டும் போதுமானது.

தொழில் தொடங்க 10×10 இடம்:

இத்தகைய தொழிலை செய்வதற்கு பெரிய இடமோ அல்லது கடையோ தேவைப்படாது. உங்களுடைய வீட்டில் சிறிய பகுதியில் வெறும் 10×10 இடம் மட்டும் இருந்தால் போதும். 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
 முதலீடு வெறும் ரூ.2000, வருமானம் தினமும் ரூ.5000, போட்டியே இல்லாத புதுமையான தொழில்

தொழில் தொடங்க தேவையான ஆவணம்:

இது உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் FSSAI லைசென்ஸ், GST registration, Trade லைசென்ஸ் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்.

How to Make Red Chilli Powder at Home:

 how to make red chilli powder at home in tamil

முதலில் நல்ல காய்ந்த சிவப்பு மிளகாயினை பார்த்து வாங்கி கொள்ள வேண்டும். அதன் பின்பு அந்த மிளகாயினை 2 அல்லது 3 நாட்கள் வரை வெயிலில் காய வைக்க வேண்டும். இவ்வாறு மிளகாய் நன்றாக காய்ந்த பிறகு அதனை தூசி எதுவும் இல்லாதவாறு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள மிளகையினை உங்களுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் ரைஸ் மில்லில் கொடுத்து நன்றாக பதம் மாறாமல் அரைத்து கொள்ளுங்கள்.

இது மாதிரி செய்தால் போதும் மிளகாய் தூள் தயார் ஆகிவிடும். மேலும் இந்த மிளகாய் தூளானது தரமாக இருக்க வேண்டும்.

எவ்வாறு பேக்கிங் செய்வது:

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள மிளகாய் தூளினை 50 கிராம், 100 கிராம், 1/ 2 கிலோ மற்றும் 1 கிலோ என தனியாக பிரித்து Zip Louck பவுச்சில் போட்டு நிரப்பி கொள்ளுங்கள்.

எங்கெங்கு விற்பனை செய்வது:

பேக்கிங் செய்து வைத்துள்ள மிளகாய் தூளினை பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, Deparment ஸ்டோர், ஹோட்டல் மற்றும் தள்ளுவண்டி கடை, Fast Food கடை ஆகிய இடங்களில் மொத்தமாக எவ்வளவு வேண்டும் என்று கேட்டு அதனை நீங்கள் விற்பனை செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ கைநிறைய தினமும் 3,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தொழில்.. குறைவான முதலீட்டில்.. 

எப்படி வருமானம் பெறுவது:

50 கிராம் மிளகாய் தூளின் விலை 15 ரூபாய் என்றும், 100 கிராம் 30 ரூபாய் என்றும், 1/2 கிலோ 150 ரூபாய் என்றும் மற்றும் 1 கிலோ 300 ரூபாய் என்றும் தோராயமாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆகவே ஒரு நாளைக்கு நீங்கள் ஒவ்வொன்றிலும் 10 பாக்கெட் விற்பனை செய்தால் தோராயமாக 4,950 ரூபாய் சம்பாதிக்க முடியும். இதனை போலவே தொடர்ச்சியாக விற்பனை செய்தால் 1 வாரத்திற்கு 34,650 ரூபாய் வருமானம் பெறலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil