கும்பகோணம் நவகிரக சுற்றுலா முன்பதிவு செய்வது எப்படி?

Advertisement

How to Book Kumbakonam Navagraha Tour in Tamil | Kumbakonam to Navagraha Temples Booking செய்வது எப்படி?

கும்பகோணத்தில் உள்ள நவக்கிரக ஸ்தலங்களுக்கு பிப்ரவரி 24-ம் தேதி முதல் சுற்றுலா பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த  நவகிரக ஸ்தலங்களுக்கு ஒரே நாளில் பிரத்யேக பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று, நவகிரஹா சுற்றுலாவுக்கான சிறப்பு பஸ் இயக்கம் பிப்ரவரி 24ம் தேதி தொடங்குகிறது. இதற்கான booking இப்பொழுது நடைபெற்று வருகின்றது. அதனால் மக்கள் அனைவரும் கும்பகோணம் நவகிரக சுற்றுலா முன்பதிவு செய்வது எப்படி? என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் இந்த நவகிரக சுற்றுலாவிற்கு செல்ல விரும்பினால், இந்த பதிவை பார்த்து முன்பதிவு செய்துகொள்ளலாம். நாங்கள் இங்கே தெளிவாக நவகிரக சிறப்பு பேருந்து இயக்கம் – முன்பதிவு செய்வது பற்றி கூறியுள்ளோம்.

கும்பகோணம் நவகிரக சுற்றுலா பயணக் கட்டணம் 

இந்த கும்பகோணம் நவகிரக சுற்றுலாவின் பயணக் கட்டணம் ஒரு நபருக்கு Rs.750 ஆகும். இதுவே, ஒரு கார் வாடகைக்கு எடுத்து சென்றால் குறைந்தது 6,500 ரூபாய் ஆகும். நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரூ. 2250/-க்கு கும்பகோணம் நவகிரக சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளலாம். இது ஒரு சிறந்த பேருந்துப் பயண விருப்பமாகும்.

நவகிரக சிறப்புப் பேருந்து பயணம் 

நவகிரக சிறப்புப் பேருந்து முன்பதிவு செய்த பயணிகளைக் கூட்டிக்கொண்டு

  • திங்களூரு சந்திரன் கோயில் தரிசனத்திற்காக காலை 6:00 மணிக்குப் புறப்பட்டுச் செல்கிறது.
  • பின்னர் திங்களூரில் இருந்து ஆலங்குடிக்கு 07:15 மணிக்கு குரு பகவானை தரிசனம் செய்து விட்டு, காலை உணவுக்கு இடைவேளை விட்டு
  • 9:00 மணிக்கு ஆலங்குடியில் இருந்து திருநாகேஸ்வரம் ராகு பகவானுக்கு திரும்புகிறது.
  • தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு சூரியனார் கோவிலில் சூரிய பகவான் தரிசனம்
  • 11:00 மணிக்கு கஞ்சனூர் சுக்ரன் கோவிலில் தரிசனம்.
  • 11:30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் கிரக தரிசனம்.
  • 12:30 முதல் 01:30 வரை சற்று மதிய உணவு இடைவேளை.
  • 2:30 மணிக்கு திருவெண்காடு புதன் கோவில் தரிசனம்
  • 4:00 மணிக்கு கீழ பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம்
  • 4:45 மணிக்கு திருநள்ளாறு சனிபகவான் தரிசனம்

இந்த தரிசனங்கள் முடிந்த பின் நவகிரக சிறப்பு பேருந்தானது 06:00 மணிக்கு புறப்பட்டு இரவு 8:00 மணிக்குள் கும்பகோணம் பேருந்துநிலையத்திற்கு வந்துவிடும்.

கும்பகோணம் நவகிரக எந்தெந்த நாட்களில் தொடங்கும் 

இந்த நவகிரக சுற்றுலாவானது வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் இயக்கப்படுகிறது.

KUMABAKONAM TO NAVAGRAHA TEMPLES SPECIAL BOOKING தகவல்கள்

  • From (KUMBAKONAM)
  • To (KUMBAKONAM NAVAGRAHA SPL)
  • Onward Journey Date
  • Time
  • Adult
  • Children

அதன் பிறகு Search என்ற பபட்டன்-ஐ click செய்யவும்.

இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள்..

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement