ஹாக்கி விளையாட்டின் தாயகம் எது தெரியுமா..?

Advertisement

Hakki Vilaiyattin Thayagam in Tamil | ஹாக்கி விளையாட்டின் தாயகம்

பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். சரி நம் இந்திய நாடானது ஒவ்வொரு விஷயத்திற்கும் பெருமை பெற்றதாக இருக்கிறது. அதுபோல நம் நாட்டில் எத்தனையோ வீர விளையாட்டுகள் இருக்கின்றன.

அப்படி இருக்கும் விளையாட்டுகளில் ஒவ்வொரு விளையாட்டிற்கும் தாயகம் என்பது கண்டிப்பாக இருக்கும். அதுபோல ஹாக்கி என்று சொன்னால் தெரியாதவர்களே இருக்க முடியாது. காரணம் நம் நாட்டில் ஹாக்கி விளையாட்டானது ரொம்பவும் பேமஸ் ஆக இருக்கிறது. சரி உங்களுக்கு ஹாக்கி விளையாட்டின் தாயகம் எது என்று தெரியுமா..? தெரியவில்லை என்றால், அதை பற்றி இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஹாக்கி விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியமா

ஹாக்கி விளையாட்டின் தாயகம் எது..? 

ஹாக்கி விளையாட்டின் தாயகம் எது

  • பொதுவாக இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று சொன்னால் அது ஹாக்கி விளையாட்டு தான். ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டாக இருப்பதற்கு காரணம் இந்தியா 1928 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை ஹாக்கி விளையாட்டில் உலகளவில் சிறந்து விளங்கி வருகிறது.
  • இந்தியா தொடர்ந்து 6 ஒலிம்பிக் தங்கபதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இந்தியா விளையாடிய 21 போட்டிகளில் 18 போட்டிகளில் வெற்றி பெற்றது. மேலும் இந்தியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. இப்படி ஹாக்கி விளையாட்டானது இந்தியாவில் கொடிகட்டி பறந்ததால், இந்தியாவின் தேசிய விளையாட்டாக போற்றப்பட்டது.
  • ஆனால் இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியும் இல்லை. ஆமாம், 2012 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியும் இல்லையென்று தகவல் அறியும் உரிமை சட்டம் கூறியுள்ளது.
  • சரி நாம் இப்போது நம் விஷயத்திற்கு வருவோம்.  ஹாக்கி விளையாட்டின் தாயகம் ஹாலந்து என்று சொல்லப்படுகிறது. 
  • ஹாலந்து என்பது ஒரு புவியியல் நிலப்பரப்பும், நெதர்லாந்தின் மேற்குக் கடற்கரையில் உள்ள முன்னாள் மாகாணமும் ஆகும். இது 10 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை, ஹாலந்து புனித உரோமைப் பேரரசுக்குள் ஒல்லாந்துப் பெருங்குடிகளால் ஆளப்பட்ட ஒரு மாவட்டமாக இருந்தது.
  • நவீன கால ஹாக்கியின் முதல் பதிப்பு 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சில சமயங்களில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement