Neermulli Powder Benefits in Tamil
Kokilaksha என்னும் மூலிகை தாவரம் தான் தமிழில் நீர்முள்ளி என்று அழைக்கப்படுகிறது. இத்தாவரம், ஈரமான பகுதியான நெல் வயல்கள், குளங்கள், ஏரிகள் போன்ற இடங்களில் நீர்முள்ளி தாவரம் அதிகமாக வளரக்கூடியது. இது குத்துச்செடி வகையை சார்ந்தது. இச்செடி தமிழர்களின் வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள மூலிகை செடி ஆகும். இந்தச் செடியின் தாவரவியல் பெயர் Asteracantha Longifolia ஆகும். இச்செடி 60 செ.மீ வரை வளரக்கூடியது. இந்த மூலிகை செடியின் விதை பகுதி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது. இவ்விதையினை பொடியாக அரைத்து பயன்படுத்தி வருவதன் மூலம் நம் உடலில் உள்ள பல ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்குகிறது. எனவே, நீர்முள்ளி விதை பவுடரில் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
நீர்முள்ளி விதை பொடி பயன்கள்:
உடல் சூட்டை நீக்குகிறது:
நீர்முள்ளி விதை உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது. எனவே, இதனை மருந்தாக உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள சூடு குறைகிறது. மேலும், உடல் சூட்டால் உண்டாகும் நீர் எரிச்சல், வயிற்று வலி மற்றும் சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவையும் நீங்குகிறது.
வயிற்று போக்கை நீக்குகிறது:
நீர்முள்ளி விதை வயிற்று போக்கை போக்குகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே, அதிகப்படியான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுபவர்கள், 200 மிலி மோரில் 1/2 ஸ்பூன் நீர்முள்ளி விதையை கலந்து தினமும் காலை மாலை என இரு வேலையும் தொடர்ந்து பருகி வந்தால் வயிற்று போக்கு நின்றுவிடும்.
ஆண்மை குறைபாட்டை போக்குகிறது:
நீர்முள்ளி விதை ஆனது, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களையும் விந்தணு உற்பத்தியையும் அதிகப்படுத்துவதன் மூலம் ஆண்களுக்கு இருக்கும் மலட்டுத்தன்மை பிரச்சனையை முற்றிலும் போக்குகிறது.
முடக்கு வாதத்தை சரிசெய்கிறது:
நீர்முள்ளி விதை, நாள்பட்ட இன்பிளமேஷனால் ஏற்படும் முடக்குவாதத்தை சரிசெய்ய உதவுகிறது. எனவே, முடக்கு வாதம் உள்ள நபர்களுக்கு நீர்முள்ளி விதையை கொடுத்து வருவதன் மூலம் முடக்குவாத பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
வெள்ளைப்படுதலை குறைக்கிறது:
பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் சம்மந்தப்பட்ட அணைத்து பிரச்சனைக்களுக்கும் தீர்வாக அமிக்கிறது இந்த நீர்முள்ளி விதை. எனவே, மாதவிலக்கு பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் பெண்கள் நீர்முள்ளி கஷாயத்தை குடித்து வருவதன் மூலம் அப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது:
நீர்முள்ளியில் ஆன்டி டயாபடீக் பண்புகள் உள்ளதால் நீரிழிவைக் கட்டுப்படுத்தி ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு நீர்முள்ளி விதை ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது.
நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
நீர்முள்ளி விதை பொடி சாப்பிடும் முறை:
நீர்முள்ளி விதை பொடியை கஷாயமாக செய்து குடித்து வரலாம்.
நீர்முள்ளி விதை பொடியை பாலில் கலந்து பருகி வரலாம்.
நீர்முள்ளி விதை பொடியை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.
நீர்முள்ளி விதை பொடியை மோரில் கலந்து குடித்து வரலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |