வலது பக்கம் நெஞ்சு வலிப்பதற்கான காரணம் என்ன.?

Advertisement

வலது பக்க நெஞ்சு வலி காரணம் | Right Side Chest Pain Reasons in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வலது பக்க நெஞ்சு வலிப்பதற்கான காரணம் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நம்மில் பலருக்கும் அடிக்கடி வலது பக்க நெஞ்சு வலிக்கும். இதற்கு என்ன காரணம் என்று நாம் அனைவருமே  தெரிந்துகொள்ள விரும்புவோம். எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் Right Side Chest Pain Reasons in Tamil பற்றி கொடுத்துள்ளோம்.

நெஞ்சு வலி என்றால் வலது பக்கம் மற்றும் இடது பக்கம் வலித்தாலும்  பயமாக தான் இருக்கும். செரிமான கோளாறு, இதய பிரச்சனை, ஹார்ட் அட்டாக் போன்றவை இருந்தால் நெஞ்சு வலி ஏற்படும். வலது பக்கம், இடது பக்கம் என்று ஒவ்வொரு பக்கமும் வலிக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். அதனால் இந்த பதிவில் வலது பக்கம் நெஞ்சு வலிப்பதற்கான காரணத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க…

வலது பக்கம் நெஞ்சு வலிப்பதற்கான காரணம் | Right Chest Pain Female in Tamil:

மன அழுத்தம்:

வலது பக்கம் நெஞ்சு வலி

பதற்றம் மற்றும் மன அழுத்தம் வலது பக்க நெஞ்சு வலிக்கு ஒரு காரணமாக இருக்கிறது. நீங்கள் அடிக்கடி பதற்றம்  அடைந்து வலது பக்கம் நெஞ்சு வலித்தால் அவை திடீர் மாரடைப்பை ஏற்படுத்தி விடும். வலது பக்கம் மார்பு வலிக்கு போது கூடவே மூச்சு திணறல், வியர்வை போன்றவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கிறது.

நெஞ்சு சளி அறிகுறிகள் மற்றும் குணப்படுத்தும் வழிமுறைகள்..!

தசை பிடிப்பு:

வலது பக்கம் நெஞ்சு வலி

தசை பிடிப்பு வலது பக்க மார்பக வலிக்கு காரணமாக இருக்கிறது. இடுப்பு வலி அல்லது சுளுக்கு போன்ற காரணங்களால் வலது மார்பகம் வலிக்கின்றது.

பித்தப்பை வலி:

வலது பக்கம் நெஞ்சு வலி

பித்தப்பை மற்றும் கல்லீரல் உடலின் வலது பக்கத்தில் அமைந்துள்ள வயிற்று குழியின் இரண்டு உறுப்புகள். அவை வீக்கமடையும் போது அல்லது சரியாக செயல்படவில்லை என்றால், வலது பக்கத்தில் வலியை ஏற்படுத்தும். வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படுவது மிகவும் பொதுவானது என்றாலும், சில சந்தர்ப்பங்களில், வலி ​​மார்புக்கும் பரவுகிறது.

நுரையீரல் பிரச்சனை:

வலது பக்கம் நெஞ்சு வலி

நுரையீரலில் உள்ள பிரச்சினைகளினால் மார்பக வலி ஏற்படுகிறது. நலப்பட்ட இதய பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை, மார்பகத்தில் கட்டி போன்றவை மார்பக வலிக்கு காரணமாக இருக்கிறது.

இதய பிரச்சனை:

வலது பக்கம் நெஞ்சு வலி

வலது மார்பக வலி இதயப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். வலது பக்க மார்பு வலி இதயத்தால் ஏற்படுவது மிகவும் பொதுவானதல்ல என்றாலும், இதய பிரச்சினைகள் வலது பக்கமாக வெளிப்படும் வலியை ஏற்படுத்தும், குறிப்பாக இதய தசை வீக்கமடைந்தால் மார்பக வலி ஏற்படுகிறது.

எந்தெந்த வலிகளை சாதாரணமாக நினைக்க கூடாது? 

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்:

சாதரண மார்பக வலியாக இருந்தால் சிறிது நேரத்தில் சரியாகிடும். அதே நேரத்தில் வலி அதிகமாக ஏற்படும் போதும் சரி, சுவாசிப்பதில் பிரச்சனை, மயக்கம் போன்ற பிரச்சனைகளும் சேர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil

 

Advertisement