வயிற்று புண் இருப்பவர்கள் இதை சாப்பிடுங்கள்.. வயிற்று புண் விரைவில் குணமாகும்..!

what are the best foods to eat for stomach ulcers in tamil

What To Eat To Get Rid of Stomach Ulcers in Tamil

நாம் உட்கொள்ளும் உணவானது செரிப்பதற்காக இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் திரவம் போன்றவை சுரக்கிறது. இந்த அமிலங்கள் காலையில் அதிகமாக சுரக்கும். இந்நிலையில் நாம் காலை உணவை தவிர்ப்பதன் மூலம் இந்த அமிலங்கள் செரிமானம் அடைவதற்கு தேவையான உணவு இல்லாததால் வயிற்று பகுதிகளை அரிக்க தொடங்குகிறது. இக்காரணத்தினால் தான் வயிற்றில் அல்சர் ஏற்படுகிறது. எனவே வயிற்று புண்களை போக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

வயிற்றுப்புண் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்:

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

வயிற்று புண் நீங்க, ஆப்பிள், பேரிக்காய் மற்றும் ஓட்ஸ் போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடும்போது வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவை குறைக்கிறது. அதுமட்டுமில்லாமல், வயிற்றில் உள்ள வீக்கம் மற்றும் வலியையும் குறைக்கிறது.

புற்றுநோயை அழிக்கும் 30 உணவுகள்

சர்க்கரை வள்ளி கிழங்கு:

 அல்சர் குணமாக என்ன சாப்பிட வேண்டும்

சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. இது வயிற்று புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. எனவே வயிற்று புண் உள்ளவர்களுக்கு சர்க்கரை வள்ளி கிழங்கு ஒரு நல்ல மருந்தாகும்.

கீரை வகைகள்:

 வயிற்றுப்புண் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்

கீரையில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. மேலும் இது வயிற்றுக்கு குளிர்ச்சி அளித்து வயிற்று புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. மேலும், இது மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது.

குடை மிளகாய்:

 what's good to eat for a stomach ulcer in tamil

குடை மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. வயிற்று புண்களை ஆற்றுவதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் வைட்டமின் சி சத்துக்கள் போதிய அளவில் கிடைக்காமல் இருப்பதும் வயிற்று புண் ஏற்படுவதற்கு ஒரு காரணமாகும். எனவே குடை மிளகாயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வயிற்று புண் எளிதில் குணமடையும்.

வாழைப்பழம்:

 what are the best foods to eat for stomach ulcers in tamil

வாழைப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் வயிற்று புண்களை எளிதில் ஆற்றலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

தயிர்:

 what are ulcer foods to eat in tamil

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் வயிற்று புண்களை போக்கும் தன்மை உடையது. எனவே, உணவில் தினமும் தயிர் சேர்த்து வருவதன் மூலம் வயிற்று புண்கள் எளிதில் குணமாகும்.

நெல்லிக்காய்:

 ulcer foods to eat in tamil

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இது குளிர்ச்சி தன்மை உடையது. எனவே வயிற்று புண்களை ஆற்ற நெல்லிக்காய் சாப்பிடலாம் அல்லது நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips