Tomato For Skin Whitening
இந்த கோடை காலத்தில் வெயிலை சமாளிக்க முடியாமல் நிழலையும், குளிர்ச்சியான பானங்களையும் தேடுகின்றனர். இருந்தாலும் இந்த வெயிலில் வெளியில் போய்ட்டு வந்தால் முகம் கருத்து போகி, முகம் பொலிவிழந்து காணப்படும். இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தினாலும் அவ்வப்போது பிரச்சனையை சரி செய்தாலும் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் இந்த பதிவில் இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருள் தக்காளியை பயன்படுத்தி முகத்தை எப்படி பொலிவாக மாற்றுவது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
முகத்தில் உள்ள எண்ணெயை எடுக்க:
முகத்தில் உள்ள எண்ணெயை நீக்குவதற்கு தக்காளியை இரண்டாக நறுக்கி ஒரு பாதியை எடுத்து முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தக்காளி சருமத்தில் உள்ள Ph அளவை சரியாக வைத்து கொள்ள உதவுகிறது.
முகப்பரு வராமல் தடுக்க:
தக்காளி சருமத்தில் உள்ள ph அளவை சரி செய்து முகப்பருவை குறைய செய்கிறது. இதற்கு ஒரு தக்காளியின் சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இதனுடன் தேயிலை மர எண்ணெய் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 10 அல்லது 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
இந்த கோடையிலும் முகத்தை பளபளன்னு வைத்து கொள்ள இதை மட்டும் செய்யுங்க..
சருமத்தை பொலிவாக மாற்றுவதற்கு:
தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ, பீட்டா கரோட்டீன் நிறைந்துள்ளதால் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. இதற்கு ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், தக்காளி சாறு, சந்தன தூள் சேர்த்து பேஸ்ட்டாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து காய்ந்து போகும் வரை வைத்திருக்கவும். பிறகு முகத்தை கழுவ வேண்டும்.இளமையாக இருக்க:
வெளியில் உள்ள மாசுக்கள் சருமத்தை பாதிக்க செய்கிறது. இதனால் சீக்கிரமாகவே முதுமை தோற்றம் ஏற்படும். அதனால் சருமத்தை நீரேற்றமாக வைத்து கொள்வது அவசியமானது.
இதற்கு ஒரு கிண்ணத்தில் தக்காளி சாறு எடுத்து கொள்ளவும். இதனுடன் அவோகேடா பழத்தை மசித்து சேர்த்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பிறகு கிளன்சர் மூலம் முகத்தை கழுவ வேண்டும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |