Sunglasses Face Shape in Tamil
கோடைக்காலம் வந்துவிட்டது, வீட்டிலும் இருக்க முடியாது, வெளியிலும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கமானது அதிகமாக இருக்கும். இதனால் கொடை மற்றும் தலையில் தொப்பி, கூலிங் கிளாஸ் இல்லாமல் வெளியில் செல்ல மாட்டோம். இந்த மூன்றும் இல்லாமல் வெளியில் சென்றால் சருமத்தில் பல பிரச்சனை ஏற்படும்.
அதுவும் வண்டியில் செல்கிறவர்கள் கூலிங் கிளாஸ் இல்லாமல் வெளியில் செல்ல முடியாது. அதனால் கூலிங் கிளாஸ் வாங்க வேண்டும் என்று நினைப்பீர்கள். இதில் என்ன சிக்கல் என்றால் நம்ம முகத்திற்கு எந்த மாதிரியான கூலிங் கிளாஸ் போட்டால் அழகாக இருக்கும் என்ற கேள்வி இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் உங்கள் முகத்திற்கு ஏற்ற கூலிங் கிளாஸ் தேர்வு செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
வட்டமான முக அமைப்பு கொண்டவர்கள்:
வட்டமான முக அமைப்பை கொண்டவர்கள் செவ்வக அல்லது சதுர வடிவங்கள் கொண்ட ஃப்ரேம்களை தேர்ந்தெடுக்கவும். இந்த வகையான பிரேம்கள் உங்களின் முகத்தை நீட்டமாக எடுத்து காண்பிக்கும்.
சதுர முகம்:
சதுர வடிவிலான முக அமைப்பை கொண்டவர்கள் வட்டம் அல்லது ஓவல் வடிவத்தில் உள்ள பிரேம்களை செலக்ட் செய்யலாம். மேலும் rimless அல்லது semi rimless கூலிங் கிளாசும் ஏற்றதாக இருக்கும்.
நீள்வட்ட முகம்:
நீள்வட்ட முகத்தை உடையவர்க்ளுக்கு எல்லா விதமான கூலிங் கிளாசும் செட் ஆகும். எல்லா விதமான கூலிங் கிளாசும் செட் ஆகும். முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் நீங்க செலக்ட் செய்யும் கூலிங் கிளாஸ் ஆனது முகத்திற்கு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்க கூடாது.
நெற்றி பகுதி பெரியதாக உடையவர்கள்:
நெற்றி பகுதி பெரிதாக உடையவர்கள் கொலொலிங் கிளாஸ் ஆனது அடிப்பகுதியானது அகலமாக இருக்க வேண்டும். Gate Eye Glasses மற்றும் Aviator Glasses போன்றவற்றை செலக்ட் செய்யலாம்.
செவ்வக முகம்:
செவ்வக முக அமைப்பை கொண்டவர்களுக்கு முகமானது நீளமாக இருக்கும். அதனால் அவர்கள் வட்டம் அல்லது ஓவல் வடிவம் கொண்ட ஃப்ரேம்கள் செட் ஆகும். இந்த மாதிரியான பிரேம்கள் பயன்படுத்தும் போது உங்களின் முகமானது அகலமாக தெரியும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |