Olive Oil Face Pack For Skin Whitening | ஆலிவ் ஆயில் முகத்தில் பயன்படுத்துவது எப்படி.?
அனைவருமே தங்களை அழகுபடுத்தி கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெரும்பாலானோர் வெள்ளையாக பல விதமான க்ரீம்களை முகத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த க்ரீம்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதற்கு பதிலாக இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி வந்தால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் முகத்தை வெள்ளையாக்கலாம். அந்த வகையில் ஆலிவ் ஆயில் முகத்தை வெள்ளையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஆலிவ் ஆயிலை எப்படி முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகம் வெள்ளையாகும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
How To Use Olive Oil For Face Whitening in Tamil:
தேவையான பொருட்கள்:
- ஆலிவ் ஆயில்- 1 ஸ்பூன்
- முட்டையின் மஞ்சள் கரு- சிறிதளவு
- இலவங்கப்பட்டை தூள்- 1/2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் மேற்கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பிறகு, முகத்தை நன்றாக கழுவி துடைத்து கொள்ளுங்கள். இப்போது, தயார் செய்து வைத்துள்ள பேஸ்டினை முகத்தின் எல்லா பகுதிகளிலும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
நன்றாக அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். அதன் பிறகு, முகத்தை வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் உங்கள் முகம் வெண்மையாகுவதை பார்க்கலாம்.
இப்படியும் பயன்படுத்தலாம்:
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் அளவிற்கு ஆலிவ் ஆயிலை சேர்த்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்:
பிறகு, இதனுடன் 1 ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
முகத்தில் அப்ளை செய்யவும்:
முதலில் முகத்தை நன்றாக கழுவி துடைத்து கொள்ளுங்கள். பிறகு, தயார் செய்து வைத்துள்ள கலவையை முகத்தில் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.
இதனை 10 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் உங்கள் முகம் வெண்மையாகுவதை பார்க்கலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |