சித்திரை மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்

Advertisement

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணம் 

மனிதர்களாக பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் உடையவர்களாக இருப்பார்கள். இந்த குணங்களில் அன்பு, பாசம், நேர்மை, காதல் என்ற எல்லாமே காணப்படும். ஒவ்வொருவரின் குணத்தை மற்றவர்களிடம் கேட்டு கொள்வார்கள். என்னுடைய குணத்தை பத்தி கூறு, என்னிடம் பிடித்தது. பிடிக்காதது போன்றவற்றை கூறு என்று சொல்வார்கள். அப்படி கூறும் போது உங்களை பற்றி முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாது. ஆனால் நம்முடைய பதிவில் பல்வேறு முறையில் குணங்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணம்:

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களை அனைவரும் விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள். ஏதவாது முடிவுகளை பற்றி நினைத்தால் அதனை எப்படியாவது சாதித்து விடுவார்கள். மேலும் ஏதாவது ஒரு குறிக்கோள்  நினைத்தாலும் அதனை முடிப்பதற்கு முழு மூச்சாக செயல்படுவார்கள்.

இவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் பிரகாசமாக காணப்படுவார்கள். முக்கியமாக அறிவியல் மற்றும் காவல் துறையில்  பிறந்தவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். ;மேலும் எதனை கண்டும் அஞ்சாத குணம் உடையவர்களாக இருப்பார்கள். இதனால் பலரிடம் மோதல்கள் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் தெரியுமா..?

நீங்கள் சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, அல்லது பணியில் ஒரு பொறுப்பில் இருந்தாலும் சரி சக பணியாளர்களை விரட்டி வேலை வாங்க வேண்டியிருக்கும். உங்களை பெரிய பகையாளியாக நினைப்பார்கள். இதனை பலரும் உங்களை திட்டுவார்கள்.

பிடிவாத குணம் உடையவர்களாக இருப்பார்கள், இவர்களுக்கு கோபம் வந்தால் அதனை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியாமல் அழுகும் குணம் உடையவர்களாக இருப்பார்கள. ஒரு விஷயத்தை செய்ய சொல்கிறார் என்றால் அதனை தள்ளி போடும் குணம் இருக்காது. அதனை உடனே செய்து முடிக்கும் வரை உங்களுக்கு தூக்கம் வராது.

சில நேரங்களில் உங்களின் முடிவுகளை அவசரமாக எடுப்பீர்கள். இதனால் பல முடிவுகள் தவறாக கூடும். அதனால் உங்களின் முன் கோபத்தினை குறைத்து கொள்ளுங்கள்.

மேலும் இவர்கள் நடை, உடை வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதனால் மற்றவர்கள் உங்களிடம் பொறாமை கொள்வார்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil

 

Advertisement