கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

Advertisement

கழுத்தில் உள்ள கருமை நீங்க புளி 

பலரும் சந்திக்க கூடிய பிரச்சனையாக கழுத்து கருமை இருக்கின்றது. இதனை சரி செய்வதற்காக கெமிக்கல் நிறைந்த பொருட்களை கடையில் வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் அவ்வப்போது பிரச்சனை சரி ஆனாலும் நாளடைவில் வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையை பின்பற்றுவது நல்லது. இந்த பதிவில் கழுத்தில் உள்ள கருமையை நீங்க புளியை பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

தேங்காய் எண்ணெய்:

கழுத்தில் உள்ள கருமை நீங்க

முதலில் தேங்காய் எண்ணெயை எடுத்து லேசாக சூடுபடுத்தி கொள்ள வேண்டும், இந்த தேங்காய் எண்ணெயை நீங்கள் குளிப்பதற்கு முன்னடி கழுத்தில் உள்ள கருமை இருக்கும் இடத்தில் அப்ளை செய்ய வேண்டும். உங்ககளுடைய நகம் அல்லது உடல் தேய்க்கும் நாரை பயன்படுத்தி தேய்க்க வேண்டும். அதன் பிறகு வெந்நீரை பயன்படுத்தி குளிக்க வேண்டும்.

புளி: 

கழுத்தில் உள்ள கருமை நீங்க புளி 

சிறிதளவு புளியை எடுத்து 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும், அதன் பிறகு புளியை லேசாக கரைத்து கொள்ள வேண்டும். இந்த புளியை தண்ணீராக கரைத்து கொள்ளாமல் கெட்டியாக கரைத்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இதனுடன் 1/2 மஞ்சள் தூள், 1/4 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

கழுத்து பகுதியில் உள்ள சதையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்

இந்த பேக்கை கழுத்தில் கருமை உள்ள இடத்தில் அப்ளை செய்து 45 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு வெந்நீரை பயன்படுத்தி தேய்க்க வேண்டும்.

புளியில் ஆல்பா ஹைட்ரோசிக் அக்சிட் , ஆன்டி Inflamatory, ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை இருக்கிறது. இந்த சத்துக்கள் ஆனது கருமையை நீக்குவதற்கு உதவுகிறது.

ஒருவேளை உங்களுக்கு புளியை கழுத்தில் பயன்படுத்துவதற்கு அச்சமாக இருந்தால் கையில் பயன்படுத்தி பாருங்கள், இதனால் எந்த வித அலர்ஜியும் ஏற்படாமல் இருந்தால் கழுத்தில் அப்ளை செய்யுங்கள்.

தேங்காய் எண்ணெயை ஒரு நாள் பயன்படுத்துங்கள். அதன் பிறகு ஒரு நாள் விட்டு புளி பேக்கை பயன்படுத்துங்கள். இது போல 15 நாட்கள் பயன்படுத்தி பாருங்கள் கழுத்தில் உள்ள கருமை நீங்கியிருக்கும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement