சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!

Advertisement

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய- How to Reduce Belly Fat After C-Section in Tamil

பொதுவாக சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு பல பெண்களுக்கு வயிறு என்பது பெரிதாக இருக்கும். அல்லது தளர்ந்து காணப்படும் இதற்கு என்ன காரணம், இதனை எப்படி சரி செய்யலாம் என்று யோசிப்பார்கள். அவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிரசவம் என்பது ஒரு பெண்ணிற்கு மறுபிறப்பாகும், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது தசைகள் எல்லாம் விரிந்து கொடுக்கும், இதனால் நமது தோலும் கொஞ்சம் விரிவடையும். சிலருக்கு பிரசவத்திற்கு பிறகு அது சரியாகிவிடும், சிலருக்கு அது தளர்ந்து போகும்.

இது பரம்பரை ரீதியாக ஒருவருக்கு தளர்ந்து போகும் பிரச்சனை இருக்கிறது என்றால் அதனை நாம் ஒன்றும் செய்ய முடியாது சின்ன சின்ன உடற்பயிச்சிகளை மட்டுமே அவர்கள் செய்ய முடியும். மரபுரீதியாக உங்களுக்கு இந்த பிரச்சனை இல்லை என்றால் நீங்கள் இங்கு கூறப்பட்டுள்ள விஷயங்களை பின்தொடரலாம் இதன் மூலம் உங்கள் இடுப்பு பகுதியில் இருக்கும் சதை, வயிற்றில் இருக்கும் தொப்பை ஆகியவற்றை மிக எளிதாக குறைக்க முடியும். அது குறைத்த தகவலை இப்பொழுது நாம் தெரிந்துகொள்வோம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தொப்பை குறைய நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க..!

உடற்பயிற்சி:

சிசேரியன் செய்த பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பிறகு மூன்று மாதம் கழித்து சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்யலாம் இதன் மூலம் உங்கள் உடல் எடை அதிகரிப்பதை நீங்கள் தவிர்க்க முடியும். மேலும் இதன் மூலம் உங்கள் இடுப்பு மற்றும் அடிவயிற்று பகுதியில் இருக்கு சதைகள் குறைய ஆரம்பிக்கும்.

பிரசவத்திற்கு பின் வரும் தொப்பையை குறைப்பதற்கான யோகா:

how to reduce belly fat after c-section

சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க விரும்புபவர்கள் உஸ்த்ராசனம், கந்தராசனம், செங்குத்து விரிவாக்க பத்மாசனம், தடாசனம், திரிகோனாசனம், நவாசனம், புஜங்காசனம், பிராணயாமம் இது போன்ற யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இருப்பினும் சுக பிரசவமாக இருந்தால் ஒரு மாதம் கழித்தும் சிசேரியனாக இருந்தால் 4 மாதம் கழித்து யோகா பயிற்சிகளை செய்யுங்கள்.

பிரசவத்திற்கு பின் வயிறு குறைய பானம்:

தேவையான பொருட்கள்:

  • இலவங்க பட்டை – 10 கிராம்
  • மஞ்சள் – 10 கிராம்
  • சித்தரத்தை – 10 கிராம்
  • திப்பிலி – 10 கிராம்
  • கருப்பட்டி – 30 கிராம்
  • தண்ணீர் – 200 மில்லி

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு சூடு படுத்தவும்.

தண்ணீர் நன்கு சூடானதும் மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தயும் சேர்த்து ஒரு 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த பானம் நன்கு ஆறியதும் 30 மில்லி அளவு காலை, மதியம், மாலை, இரவு இவற்றில் ஏதேனும் ஒரு வேளை மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டும் பருகி வந்தால் போதும்.

படி படியாக உடலில் உள்ள கெட்ட அழுக்குகள் அனைத்தும் நீங்கும். இதனால் உடல் எடை மற்றும் தொப்பை ஆகியவை குறையப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தொப்பை குறைய வேண்டுமா இந்த Magical காபி குடிங்க போதும்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement