மேக்கப் போடாமல் அழகாக இருக்க என்ன செய்வது
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக சரி தன்னை அழகாக காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக முகத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு பார்லர் சென்று தங்களை அழகுபடுத்துகிறார்கள். ஆனால் எல்லாராலும் பார்லருக்கு செல்ல முடியாது. ஏனென்றால் சில பேர் வேலைக்கு செல்பவர்களாக இருப்பார்கள், சில பேர் வீட்டில் வேலையை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். அதனால் அவர்களால் பார்லருக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால் தான் இந்த பதிவில் மேக்கப் போடாமல் அழகாக வைத்து கொள்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்:
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள், அதாவது நீங்கள் என்ன மன நிலையில் இருக்கிறீர்களோ அந்த நிலையானது உங்களின் முகத்தில் தெரியும். அதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது அவசியமானது. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலே உங்கள் முகம் அழகாக இருக்கும்.
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்:
தண்ணீர் நிறைய குடிப்பது அவசியமானது, இவை நீர்ச்சத்திற்கு மட்டுமில்லாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வதற்கும் உதவுகிறது. அதனால் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குறையாமல் குடியுங்கள்.
புருவங்கள்:
புருவங்களை அழகுபடுத்தினால் முகம் அழகாக இருக்கும். சில பேருக்கு புருவம் அடர்த்தியாக இருக்கும் ஆனால் முடியானது ஒழுங்கில்லாமல் இருக்கும். அதனால் புருவத்தை அடர்த்தியாகவும், நேர்த்தியாகவும் வைத்து கொண்டால் முகம் அழகாக இருக்கும்.
சரும ஆரோக்கியம்:
சருமத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்வது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நீங்கள் முகத்தில் இயற்கையான பேக்குகளை போடுவதன் மூலம் முகத்தை அழகாக வைத்து கொள்ளலாம். தினமும் முகத்தில் கடலை மாவு பேக் அல்லது பயத்த மாவு பேக் போன்றவற்றை முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் வைத்திருந்து அதன் பிறகு முகத்தை கழுவி கொள்ளலாம்.
ஹேர் ஸ்டைல்:
முகத்திற்கு அழகு தருவதற்கு முக்கியமான இடத்தை பிடிப்பது ஹேர் ஸ்டைல் தான், நீங்கள் முகத்தில் கவனம் செலுத்துவது அதனை போல தான் ஹேர் ஸ்டைலில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு முடி எப்படி இருந்தாலும் அதில் நீங்கள் ஹேர் ஸ்டைலை மட்டும் மாற்றம் செய்தாலே முகம் அழகாக இருக்கும்.
தூக்கம்:
மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லி தெரிய வேண்டாம். உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு நாள் சரியாக தூங்கவில்லை என்றாலும் மறுநாள் உங்கள் முகத்தை பார்த்து மற்றவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் சரியான நேரத்திற்கு தூங்குவது அவசியம். ஒரு நாளைக்கு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியமானது.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |