ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக ரூ.800 உயர்வு!

Advertisement

தங்கம் விலை இன்று 02.03.2024

ஆண்களை விட பெண்கள் தான் தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும். பெண்கள் எவ்வளவு தான் தங்க நகைகள் வைத்திருந்தாலும் போதும் என்ற நிலைக்கு வர மாட்டார்கள். ஏனென்றால் தற்போது என்ன புது மாடலாக வந்துள்ளதோ அல்லது யாரும் புது விதமாக தங்க நகையினை அணிந்திருந்தால் அதை வாங்குவதற்காக பணத்தை சேமித்து வைப்பார்கள். இப்படி பெரும்பாலானவர்கள் தங்கத்தில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.

இதற்கான முக்கிய காரணமாக இருப்பது அதனுடைய விலை தான். ஏனென்றால் நாளுக்கு நாள் தங்க விலையானது உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் மேல் இருக்கும் ஆசை குறைய மாட்டிக்கிறது. நேற்றைய விலையை விட இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது. எவ்வளவு உயர்ந்துள்ளது, இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை போன்றவற்றை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

தங்கம் விலை நிலவரம் சனிக்கிழமை  02.03.2024

22 கேரட் தங்கமானது நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 5,940 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து 47,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 6,410 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து 51,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை சனிக்கிழமை 02.03.2024:

நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 77.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 800 ரூபாய் அதிகரித்து 77,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை இன்றைய நிலவரம்

பிளாட்டினம் விலை சனிக்கிழமை 02.03.2024:

பிளாட்டினம் ஒரு கிராமின் விலை 3,222 ரூபாய்க்கும், ஒரு 8 கிராம் பிளாட்டினம் விலையானது 25,776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய பிளாட்டினம் விலை

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement