இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய சேவை..! இனி சிம் கார்டில் இந்த சேவை கிடைக்காது..!

Advertisement

New Rules For SIM Card Telecom Operators in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா..? என்னனு யோசிக்கிறீர்களா..? அட அதை பத்தி தான் இந்த பதிவுல சொல்லப்போறோம். பொதுவாக நம் அனைவரிடமும் போன் இருக்கிறது. இன்றைய சூழலில் மொபைல் போன் இல்லாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. அப்படி நாம் அனைவரும் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு முக்கியமான ஒன்றாக இருப்பது சிம் கார்டு தான். ஆகவே நாம் சிம் கார்டு இருந்தால் தான் எந்த போனாக இருந்தாலும் அதை பயன்படுத்த முடியும்.

அப்படி ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் (BSNL) போன்ற சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்களுக்கும் அனைத்து டெலிகாம் (Telecom) நிறுவனங்களுக்கும் முக்கிய கட்டுப்பாடுகளை மத்திய அரசின் தொலை தொடர்பு துறையானது விதித்துள்ளது. அது என்ன கட்டுப்பாடுகள் என்று இப்பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

என்னது இனிமே போன்ல Bluetooth -ஆ Off பண்ணவே முடியாதா.. என்னங்க சொல்றீங்க..

ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும் புதிய விதி: 

ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும் புதிய விதி

பொதுவாக நாம் அனைவருமே ஜியோ, ஏர்டெல் போன்ற சிம்களை தான் பயன்படுத்தி வருகின்றோம். அப்படி ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும்  பிஎஸ்என்எல் (BSNL) போன்ற சிம் கார்டுகளை வழங்கும் அனைத்து டெலிகாம் (Telecom) நிறுவனங்களுக்கும் முக்கிய கட்டுப்பாடுகளை Telecom Regulatory Authority of India (TRAI) மத்திய அரசின் தொலை தொடர்பு துறையானது அறிவித்துள்ளது.

மேலும் இந்த விதிகள் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகின்றன. இதன் காரணமாக சிம் கார்டு பயன்படுத்தும் அனைத்து கஸ்டமர்களும் இது வரை பெற்று வந்த சேவை திடீர் என்று நிறுத்தப்படுகிறது.

அதாவது இது வரையில் வழங்கப்பட்டு வந்த USSD அடிப்படையிலான அழைப்பு பகிர்தல் (USSD Based Call Forwarding) சேவையை நிறுத்த மத்திய தொலை தொடர்பு நிறுவனம் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக USSD என்றால் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். அதாவது சிம் கார்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது, எவ்வளவு டேட்டா இருக்கிறது என்பதை இந்த USSD கோடுகள் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல் மொபைல் போனின் IMEI நம்பரை நாம் தெரிந்து கொள்ளலாம்.

70 ஆண்டுகளுக்கு பின் வானில் நடக்கும் அதிசயம்..! மிஸ் பண்ணிடாதீங்க..

இன்னும் சொல்லப்போனால் நம்முடைய போன் நம்பருக்கு வரும் கால்களை மற்றொருவருக்கு நம்மால் Forward செய்து கொள்ள முடியும். இப்படி பல்வேறு சேவைகளுக்கு இந்த USSD கோடுகள் பயன்படுகின்றன.

ஆனால் மத்திய அரசின் தொலை தொடர்பு துறை இந்த USSD சேவையை நிறுத்துவதற்கு முக்கிய காரணம், Call Forwarding கோடுகள் மூலம் எளிதாக கஸ்டமர்களை ஏமாற்றி விட அதிக வாய்ப்புள்ளது.

ஏனென்றால், உங்களுடைய போனை சில நிமிடங்கள் வேறொருவர் வைத்திருந்தால் போதும்.  Call Forwarding USSD கோடை பயன்படுத்தி உங்களுக்கு வரும் கால்களை அவர்களுடைய மொபைலிற்கு மாற்றிக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்களுக்கு வரும் கால்கள் மட்டுமல்லாமல் SMS -களையும் பயன்படுத்தி டிஜிட்டல் பண பறிப்பிலும் அவர்களால் ஈடுபட முடியும்.

இந்த காரணத்தால் தான் Telecom Regulatory Authority of India (TRAI) மத்திய அரசின் தொலை தொடர்பு துறையானது இந்த USSD சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement