என்னது இனிமே போன்ல Bluetooth -ஆ Off பண்ணவே முடியாதா..? என்னங்க சொல்றீங்க..!

Advertisement

Google Bluetooth Mode New Update News in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! உங்க எல்லாருக்கும் இந்த விஷயம் தெரியுமா..? அது என்னனா..! கூகுள் தற்போது ஸ்மார்ட் போன் யூசர்ஸ்க்கு புதுசா ஒரு Update ஆ கொண்டு வந்துருக்கு. அதுவும் இந்த அப்டேட்டானது ஸ்மார்ட் போன் பயனர்கள் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் அது என்ன அப்டேட்னு தெரிஞ்சிக்க எல்லாருமே ரொம்ப ஆவலா இருப்பீங்க. So அது என்ன அப்டேட் அப்டினு தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளப்போகின்றோம்.

பொதுவாக இப்போது இருக்கும் காலகட்டத்தில் யாரிடம் தான் ஸ்மார்ட் இல்லை சொல்லுங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. இதனை தொடர்ந்து கூகுள் நிறுவனமானது ஸ்மார்ட் போன் ப்ளூடூத்தில் புதிதாக ஒரு Update கொண்டுவந்துள்ளது. அது என்ன Update, எதற்காக இந்த Update கொண்டு வரப்பட்டது என்ற விவரங்களை இப்பதின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

70 ஆண்டுகளுக்கு பின் வானில் நடக்கும் அதிசயம்..! மிஸ் பண்ணிடாதீங்க..

Bluetooth -ல் கூகுள் கொண்டு வந்த ஷாக்கிங் அப்டேட் என்ன..? 

Bluetooth -ல் கூகுள் கொண்டு வந்த ஷாக்கிங் அப்டேட் என்ன

தற்போது கூகுள் நிறுவனமானது, நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் உள்ள ப்ளூடூத் (Bluetooth) அம்சமானது இனிமேல் OFF செய்ய முடியாதபடி மாறப்போகிறது என்ற செய்தியை வெளியிட்டுள்ளது.

இதை கேட்ட ஸ்மார்ட் போன் பயனர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளார்கள். பொதுவாக கூகுள் நிறுவனமானது Android Operating System வழியாக, User Experience -ஐ மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட பல அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து Android 15 OS Update வழியாக ப்ளூடூத் (Bluetooth) அம்சத்திற்கு ஒரு அப்டேட்டை கொண்டு வருகிறது.

அதாவது, கூகுள் நிறுவனமானது தற்போது ஒரு புதிய ப்ளூடூத் மோட் (New Bluetooth Mode) ஆப்ஷனை அறிமுகம் செய்யப்போகிறது. 

பொதுவாக நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் இருக்கும் Bluetooth ஆப்ஷனை நம்மால் On மற்றும் Off செய்து பயன்படுத்துவோம். ஆனால் இந்த New Bluetooth Mode அப்படி இல்லை. இந்த ஆப்ஷனை நம்மால் OFF செய்யவே முடியாதாம்.

அதாவது தற்போது வரும் ப்ளூடூத் ஆனது OFF செய்யப்பட்ட்டிருந்தாலும், அது இயங்கிக்கொண்டு தான் இருக்கும். அதாவது Bluetooth பார்ப்பதற்கு OFF செய்யப்பட்டு இருப்பது போல் தான் இருக்கும். ஆனால் அது குறைந்த ஆற்றல் நிலையில் (Low-Energy State) தொடர்ந்து செயல்படும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

இப்படி Bluetooth ஆனது Background -ல் ரன் ஆகிக்கொண்டிருப்பதால், ஸ்மார்ட் போன் பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கிறது என்றும், மேலும் போனில் பல பாதுகாப்பு பணிகளை செய்கிறது என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

அதுபோல இந்த புதிய Update ஆனது கூகுள் போன் ஆப்பின் பீட்டா வெர்ஷன் (127.0.620688474) வழியாக சோதனை கட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த Update ஆனது பீட்டா டெஸ்டிங் முடிந்ததும், ஜூன் மாதத்தில் அனைத்து ஸ்மார்ட்போன்களில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement