தங்கத்தின் இன்றைய விலை 10.04.2024
தங்கம் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது, ஆனால் தங்கத்தின் விலையை பார்த்தால் அது வெறும் கனவாகவே இருந்து விடும் போல, ஏனென்றால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. பணக்காரர்களாக இருந்தால் தங்க விலை எவ்வளவாக இருந்தாலும் நினைத்த உடனே வாங்கி விடுவார்கள். ஆனால் சாமானிய மக்களால் நினைத்த உடனே தங்கத்தை வாங்க முடியாது. ஏனென்றால் அவர்கள் ஒரு கிராம் தங்கத்தை வாங்குவதற்கு ஒரு வருடத்திற்க்கு பணத்தை சேமித்து வைக்க வேண்டியதாக இருக்கிறது.
அப்படி இருக்கும் போது தங்கம் விலை இப்படி ஏறி கொண்டே இருந்தால் அவர்களின் இந்த ஆசை கூட நிறைவேறாது. தங்க விலை தினமும் எவ்வளவு என்று பார்த்து கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் தங்க விலையானது குறைவாக இருக்கும் போது உடனே வாங்கி விடுவார்கள். இந்த பதிவில் தங்க விலை குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா என்று முழு பதிவை படித்து அறிந்து கொள்ளவும்.
தங்கம் விலை நிலவரம் புதன் கிழமை 10.04.2024
22 கேரட் தங்கமானது நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 6,705 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 53,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 7,175 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 57,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை புதன் கிழமை 10.04.2024:
நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 89.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 1000 ரூபாய் அதிகரித்து 89,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பிளாட்டினம் விலை புதன் கிழமை 10.04.2024:
பிளாட்டினம் ஒரு கிராமின் விலை 3,440 ரூபாய்க்கும், ஒரு 8 கிராம் பிளாட்டினம் விலையானது 27,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |