70 ஆண்டுகளுக்கு பின் வானில் நடக்கும் அதிசயம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!

Advertisement

Comet Approaches Earth After 70 Years in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா..? அது என்னனா..? 70 வருஷத்துக்கு அப்றம் பூமியில் ஒரு அதிசயம் நடக்கப்போகிறது. அது என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக பார்க்கப்போகின்றோம். பொதுவாக வானம் என்பது பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. விண்வெளியில் நம்மை வியக்கவைக்கும் ஆச்சர்யங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படி விண்வெளியில் நடக்கும் ஆச்சர்யமான ஓன்று தான் வால் நட்சத்திரம்.

பொதுவாக வால் நட்சத்திரம் பற்றி நம்மில் ஒரு சிலருக்கு தெரியும். அதுபோல வால் நட்சத்திரத்தை நம்மில் பலரும் பார்த்திருப்பார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வால் நட்சத்திரமானது 70 ஆண்டுகளுக்கு பிறகு நம் பூமியை நெருங்கி வருகிறது. இந்த நிகழ்வானது எப்போது நடக்க இருக்கிறது மற்றும் இது குறித்த தகவல்களை பின் வருமாறு பார்க்கலாம் வாங்க.

சூரிய கிரகம் அன்று பள்ளி விடுமுறை எங்கு தெரியுமா..

70 ஆண்டுகளுக்கு பின் பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்: 

pons-brooks comet 2024

பொதுவாக கற்பனைக்கு எட்டாத பல பேரதிசயங்கள் விண்வெளியில் நடந்து வருகின்றன. அதுபோல மனிதனால் நினைத்து கூட பார்க்கமுடியாத அளவிற்கு தினம் தினம் ஒரு மாற்றமானது வானில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த அதிசயங்களில் சூரிய கிரகணமும், சந்திரகிரகணமும் ஓன்று. அதை பற்றி தெரிந்து கொள்வதற்கு நாமும் ஆர்வமாக இருப்போம்.

அதுபோல தான் தற்போது 70 ஆண்டுகளுக்கு பின் விண்ணில் ஒரு வால் நட்சத்திரமானது பூமியை சுற்றி வருகிறது. அதுவும் இது நம் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே நடக்க கூடிய அரிய நிகழ்வு வானில் நடக்கப்போகிறது.

அதாவது Pons-Brooks என்ற வால் நட்சத்திரமானது நம் பூமியை நெருங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். இந்த வால் நட்சத்திரமானது இந்த ஆண்டு 2024 ஜூன் மாதம் நம் பூமிக்கு மிக நெருக்கத்தில் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதை எப்படி பார்க்கலாம்..?

மேலும் இந்த நட்சத்திரமானது சூரிய குடும்பத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு வரும் முதல் நட்சத்திரம் என்று கூறப்படுகிறது.

எனவே தற்போது பூமிக்கு நெருக்கமாக கடந்து செல்லும் இந்த நட்சத்திரமானது சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டதாக இருக்கிறது. எனவே விஞ்ஞானிகள் “இந்த நட்சத்திரத்தை வெறும் கண்ணாலே பார்க்க முடியும்” என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த வால் நட்சத்திரத்தை மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாத துவக்கம் வரை நம்மால் நன்கு பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள். மேலும் வானத்தில் அந்தி சாயும் நேரத்தில் மேற்கு அடிவானத்தில் இந்த நட்சத்திரமானது கண்ணுக்கு புலப்படும் என்று கூறுகிறார்கள்.

ஆகவே இந்த வால் நட்சத்திரத்தை இப்போது பார்க்கவில்லை என்றால், இதன் பிறகு 2095 ஆம் ஆண்டில் தான் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நட்சத்திரத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement