TRAI கொடுத்த அறிவிப்பு! ஜூலை 1 முதல் சிம் கார்டு விதிகள் மாற்றம்…

Advertisement

Sim Card New Rules 2024

மொபைலை இயக்க வேண்டுமென்றால் சிம் கார்டு ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மொபைலில் சிம் கார்டை போட்டால் தான் அவற்றை நாம் பயன்படுத்த முடியும். இந்த சிம்மில் பல வகைகள் இருக்கிறது. நாம் சிம் வாங்கும் போது அதற்காக ஆதாரத்தை கொடுத்த பிறகு தான் சிம் வாங்க முடியும்.

தொழில்நுட்பம் எப்படி வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே போல மோசடிகளும் நடந்து கொண்டே இருக்கிறது. அதனை தடுப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் சிம் கார்டிற்கான புதிய விதியை அரசு அமல்படுத்தியுள்ளது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

TRAI புதிய மாற்றம்:

இந்தியாவில் சிம் கார்டு வாங்குபவர்களுக்கு trai ஆனது புதிய விதியை அறிவித்துள்ளது. இந்த விதியானது ஜூலை 1-ம் தேதி முதல் செயல்முறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய விதிமுறைகள் ஆனது மோசடி செய்பவர்கள் மற்றும் ஹேக்கர்கள்  தடுக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதாகும்.

மொபைல் எண்ணை போர்ட்டபிலிட்டி (MNP) விதியின்படி தங்களின் சிம் கார்டை மாற்றிய பிறகு அல்லது வாங்கிய பயனர்கள் தங்களின் மொபைல் எண்களை போர்ட் செய்ய முடியாது. அதாவது, ஒருமுறை சிம் கார்டுகளை போர்ட் செய்த பயனர்கள், இனி அவர்களின் மொபைல் எண்ணை மீண்டும் ஒருமுறையோ அல்லது பலமுறையோ போர்ட் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம் எக்சேஜ் மற்றும் சிம் ஸ்வாப்பிங் என்று அழைக்கப்படும் சிம் தொடர்பானவற்றை இனி ஒரு நபர் ஒரு முறை மட்டுமே செய்ய அனுமதி கிடைக்கும்.  சிம் பரிமாற்றம் என்பது சிம் ஸ்வாப்பிங் எனப்படும். சிம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது உடைந்தால் சிம் இடமாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் தற்போது இந்த சிம் கார்டுகள் தொலைந்து போனாலோ அல்லது உடைந்தாலோ டெலிகாம் சேவை மையத்தை அணுகி பயனர்கள் புதிய சிம் கார்டு முறை இனி வாங்க முடியாது.

நாட்டில் சிம் தொடர்பான மோசடி தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.  இதற்கு சிம் ஸ்வாப்பிங் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால், மொபைல் பயனர்கள் மொபைல் இணைப்பை மாற்றிய உடனேயே போர்ட் செய்வதையை தடுக்கும் வகையில் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. அதன்படி, இனி ஒரு முறைக்கு மேல் சிம் கார்டுகளை மாற்ற முடியாது. விதிகளை மாற்றுவதன் மூலம் மோசடி சம்பவங்களை தடுக்க முடியும் என்று TRAI கூறியுள்ளது.

உங்களுடைய சிம் கார்டு ஆனது தொலைந்து போனாலோ அல்லது உடைந்து போனாலோ நீங்கள் உடனடியாக புதிய சிம் கார்டை மாற்ற முடியாது. அதற்காக ஒரு குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் என்றும் அதற்காக விதிமுறைகளை ஜூலை 1முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளது.

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement