தமிழ் பைபிள் வினா விடை PDF

Advertisement

Bible Questions and Answers in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. பரிசுத்த வேதாகமம், விவிலியம் (திருவிவிலியம், Bible), என்பது யூதர் மற்றும் கிறிஸ்தவர் ஆகியோரின் புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியமானது, ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு மட்டுமன்றி, உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது.

இத்தகைய பெருமை பெற்ற நூலில் இருந்து கேட்கப்படும் பைபிள் வினா விடை சிலவற்றை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க..

தமிழ் பைபிள் வினா விடை PDF:

1 ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பவர் யார்?

விடை: இயேசு 

2 இயேசு கிறிஸ்துவின் அம்மா பெயர் என்ன?

விடை: மரியாள் 

3 இயேசு தம்முடைய சீஷர்களாக எத்தனை பேரை தம்மிடம் அழைத்தார்?

விடை: 12

4 சவுலும் யோனத்தானும் எந்த எவைகளை பார்க்கிலும் வேகமுள்ளவர்கள்?

விடை: கழுகுகள் 

5 ஜலத்தின் மேல் நடக்க ஆசைப்பட்டவன் யார்?

விடை: பேதுரு 

6 யாருடைய கொம்பு உயர்த்தப்படும்?

விடை: நீதிமான் 

7 உம்முடைய ———– என மனமகிழ்ச்சி ?

விடை: வேதம் 

8 ரபீ என்பதன் பொருள் என்ன?

விடை: போதகர் 

9 மேசியா என்பதன் அர்த்தம் என்ன?

விடை: கிறிஸ்து

10 சலபமோனின் தகப்பன் பெயர் என்ன?

விடை: தாவீது 

11 பூமியும் அதின் நிறையும் யாருடையது?

விடை: கர்த்தர் 

12 சரீரத்திற்கு விளக்கயிருக்கும் உறுப்பு எது?

விடை: கண் 

13 ஐந்நூறு வயதானபோதும் சேம் காம் யாப்பேத்தை பெற்றது யார்?

விடை: நோவா 

14 கர்த்தர் யாருடைய இருதயத்தை கடினப்படுத்தினார்?

விடை: பார்வோன் 

15 எதை அறிந்தோமானால் நமக்கு விடுதலை உண்டாகும்.

விடை: சத்தியம் 

16 எதையாகிலும் யாரிடமாவது அநியாயமாய் நான் வாங்கினால் நாலத்தனையாகத் செலுத்துகிறேன் என்று சொன்னது யார்?

விடை: சக்கேயு 

17 வயல்காரர் பேர் என்ன?

விடை: போவாஸ் 

18 யார் வருவார் என்று எதிர்பார்துகிண்டிருக்கிறோம் 

விடை: இரச்சகர் 

19 கர்த்தருடைய கண்கள் யார்மேல் நோக்காமையிருக்கிறது 

விடை: நீதிமான் 

20 கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நீங்கள் நிந்திக்கப்பட்டால் எப்படிப்பட்டவர்கள் 

விடை: பாக்கியவான் 

21 யாரை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார் 

விடை: யோனா 

22 அவர் குப்பையிலுருந்து யாரை உயர்த்துகிறார் 

விடை: எளியவனை 

23 யோசுவாவோடு கூட யார் இருந்ததனால் அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று 

விடை: கர்த்தர் 

24 நீடிய சாந்தமுள்ள மனிதன் எப்படிப்பட்டவன் 

விடை: மகாபுத்திமான் 

25 நன்மைசெய்து பாடநுபவிப்பது எது நமக்கு எப்படிப்பட்டதாய் இருக்கும்.

விடை: மேன்மையாய் 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ் பைபிள் வசனங்கள்

26 யார் நமக்கு சகாயர் 

விடை: கர்த்தர் 

27 கர்த்தர் சோதனையிலிருந்து யாரை இரட்சிக்கிறார் 

விடை: தேவபக்தியுள்ளவர் 

28 கண்ணீரோடே விதைக்கிறவர்கள் எப்படி அறுப்பார்கள்

விடை: கெம்பீரத்தோடு 

29 தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம், வரை வாழ்ந்து மரித்தது யார் 

விடை: மெத்தூசலா 

30 நான் அவரைத் தியானிக்கும் தியானம் அது எப்படி இருக்கும் 

விடை: இனிதாய் 

31 எவ்விடத்திலுமிருந்து யாருடைய கண்கள் நல்லோரையும் தீயோரையும் நோக்கி பார்க்கிறது. 

விடை: கர்த்தரின் 

32 தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு எத்தனை தலைமுறை இரக்கம் செய்வார் 

விடை: ஆயிரம் 

33 ஆண்டவரே யாரிடத்தில் போவோம் நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உள்ளது என்று சொன்னது யார்?

விடை; சீமோன் பேதுரு 

34 லேயாள் ஜனங்கள் எல்லாராலும் எப்படி என்ன பட்டிருந்தாள் 

விடை: அற்பமாய் 

35 தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் என்ன அளிக்கின்றார் 

விடை: கிருபை 

36 நல்ல மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளுக்காக எதை கொடுக்கிறான் 

விடை: ஜீவனை 

37 உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன், என்று யாரிடம் கர்த்தர் சொல்ல சொன்னார் 

விடை: எசேக்கியா 

38 இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு யாரை விற்றார்கள் 

விடை: யோசேப் 

39 ஊத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கும் விலகினது யார்?

விடை: யோபு 

40 வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் எப்படிப்பட்டவர்கள் 

விடை: ஆசீர்வதிக்கப்பட்டவர் 

41 தினம் மூன்று வேளையும் தேவனை நோக்கி ஜெபம் செய்துகொண்டிருந்தது யார்?

விடை: தனியேல் 

42 கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் யார்மேல் முழங்கப்பண்ணி, அவர்களைக் கலங்கடித்தார் 

விடை: பெலிஸ்தர் 

43 கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம் பேரைக் கொன்றேன் என்று சொன்னது யார்?

விடை: சிம்சோன் 

44 கர்ப்பத்தின் கனி யாரால் கிடைக்கும் பலன் 

விடை: கர்த்தரால் 

45 தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அவன் மனைவிக்கும் என்ன உடைகளை உண்டாக்கி உடுத்தினார் 

விடை: தோல் உடை 

46 தேவ ஆவினால் அருளப்பட்டிருக்கிறது என்ன?

விடை: வேத – வாக்கியங்கள் 

47 கர்த்தரின் ஆசிர்வாதம் நமக்கு என்ன தரும்?

விடை: ஐசுவரியம் 

48 நசசேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நாட என்று சொன்னது யார்?

விடை: பேதுரு 

49 ராஜா சகல ஸ்திரிகளை பார்க்கிலும் யார் மேல் அன்பு வைத்தான் 

விடை: 

50 யாருடைய சிறையிருப்பை கர்த்தர் மாற்றினார் 

விடை: யோபு 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement