Autism Symptoms in Tamil
ஆட்டிசம் என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரம் 2 ம் தேதி ஆட்டிசம் விழிப்பு உணர்வு நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக குழந்தை பருவத்தில் ஆட்டிசம் வெளிப்படுகிறது. ஆட்டிசம் உள்ள பெண்களை விட ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது. ஓகே வாருங்கள், ஆட்டிசம் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
ஆட்டிசம் (Autism) என்றால் என்ன.?
ஆட்டிசம் என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும். ஆட்டிசம் ஏற்பட்டால் மற்றவர்களுடன் இயல்பாக பேசுவதிலும் பழகுவதிலும் வேறுபாடு காணப்படும். குறிப்பாக சொல்லப்போனால், ஆட்டிசம் பிறருடன் பழகும்போது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் குழந்தை பருவத்தில் ஏற்படுகிறது. அதாவது, இதனை இயல்பான நிலையில் இருந்து விலகி இருப்பதை குறிக்கிறது. ஆட்டிசம் என்பது நோய் அல்ல இது ஒரு வளர்ச்சி குறைபாடும் என்பதை அனைவரும் அறிய வேண்டும்.
Autism Meaning in Tamil:
ஆட்டிசம் என்றால் மன இறுக்கம் என்பது அர்த்தம் ஆகும்.
ஆட்டிசம் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்:
குழந்தைகளின் வளர்ச்சியில் குறைகள் காணப்படும். அதாவது, வயதிற்கேற்ற வளர்ச்சி இருக்காது அல்லது வளர்ச்சி குறைவாக இருக்கும்.
ஆட்டிசம் உள்ள குழந்தைகள் அதிகமாக தனிமையில் இருக்க விரும்புவார்கள்.
மீண்டும் மீண்டும் ஒரே விதமான விஷயத்தை செய்து கொண்டிருப்பார்கள்.
காரணம் இல்லாமல் கையில் இருக்கும் பொருட்களை தூக்கி வீசுவார்கள்.
அடிக்கடி கை அல்லது கால்களை வளைத்து நெளித்து கொண்டே இருப்பார்கள்.
குழந்தையின் பெயரை கூறினாலோ அல்லது வேறு ஏதேனும் சத்தத்தை எழுப்பினாலும் அசையாமல் இருப்பது.
எந்தவொரு ஆபத்தை பற்றியும் பயம் அடைய மாட்டார்கள்.
ஆட்டிசம் உள்ள குழந்தைகளில் சில குழந்தைகள் அடிபட்டால் கூட அதன் வலியை வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் ஒரு சில குழந்தைகள சிறு காயம் ஏற்பட்டால் கூட நீண்ட நேரம் அழுதுகொண்டே இருப்பார்கள்.
கணையத்தில் வீக்கம் இருந்தால் இந்த அறிகுறிகள் எல்லாம் தோன்றும்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |