இது தான் வயிற்று போக்கின் அறிகுறிகளா..?

Advertisement

Dysentery Symptoms in Tamil

பொதுநலம் பதிவின் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு நோய்க்கான அறிகுறிகளை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். காரணம் இப்போதெல்லாம் உடலில் ஏதாவது சிறிய அறிகுறி இருந்தாலும் நமக்கு அவ்வளவு பயமாக இருக்கிறது. காரணம் நாம் வாழும் உலகம் அந்தளவிற்கு நம்மை மாற்றிவிட்டது. அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது இருக்கு காலம் அப்படியா இருக்கிறது..?

அதுவும் அந்த காலத்தில் உணவுகளை மருந்தாக உண்டு நோய்களை விரட்டினார்கள். ஆனால் நாம் மருந்துகளை உணவாக உண்டு தான் உயிர் வாழ்கிறோம். அதை தான் உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்ற காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம். இப்படி ஒரு சூழலில் நம் உடலில் சிறிய அறிகுறி இருந்தாலும் என்னவாக இருக்கும் என்று பயப்படுவோம். அதனால் தான் நம் பதிவின் மூலம் தினமும் ஒரு நோய்க்கான அறிகுறிகளை கூறி வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் வயிற்றுப்போக்கினை அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வயிற்றுப்போக்கு நிற்க வீட்டு வைத்தியம்

வயிற்றுபோக்கு ஏற்பட காரணம்: 

வயிற்றுபோக்கு ஏற்பட காரணம்

பொதுவாக நம் அனைவருக்குமே இந்த நோயானது வந்திருக்கும். அதாவது வயிற்று போக்கை பற்றி தான் கூறுகின்றேன். வயிற்று போக்கு அல்லது வயிற்று கடுப்பு என்பது ஏதோ ஒரு சூழலில் அனைவருக்கும் ஏற்பட கூடிய ஓன்று தான். நாம் அனைவருமே நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த பிரச்சனையை சந்தித்திருப்போம்.

இந்த வயிற்று போக்கு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஒரு பாக்டீரியா தொற்று என்று சொல்லப்படுகிறது. மேலும் நாம் சுத்தமில்லாத உணவுகள் மற்றும் தண்ணீரை குடிப்பதாலும் வயிற்று போக்கு ஏற்படுகிறது. இந்த வயிற்று போக்கை நாம் சாதாரணமாக எடுத்து கொள்வோம்.

ஆனால் இது நம் உடலில் பெரிய பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனால் வயிற்று போக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. பொதுவாக வயிற்றுபோக்கு இருந்தால் சில அறிகுறிகள் தோன்றும். அந்த அறிகுறி என்னவென்று இப்போது காணலாம்.

குழந்தை வயிற்றுப்போக்கு நிற்க வீட்டு வைத்தியம்

வயிற்றுபோக்கு அறிகுறிகள்: 

  • நீர் போன்று அல்லது மோசமான மலம்.
  • மலத்தில் சளி மற்றும் இரத்தம் ஏற்படுதல்.
  • மலம் கழிக்கும் போது ஏற்படும் வலி.
  • காய்ச்சல்.
  • குமட்டல்.
  • அடிக்கடி மலம் கழிப்பது
  • வயிற்றின் அடிப்பகுதியில் அதிக வலி

இதுபோன்ற அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

வயிற்று புண் இருப்பவர்கள் இதை சாப்பிடுங்கள்.. வயிற்று புண் விரைவில் குணமாகும்..

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement