வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

40 நாள் கர்ப்ப அறிகுறிகள்

Updated On: April 18, 2024 5:33 PM
Follow Us:
40 days pregnancy symptoms in tamil
---Advertisement---
Advertisement

40 Days Pregnancy Symptoms in Tamil

பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்றால் அவை திருமணம் தான். திருமணம் முடிந்த பிறகு அவளின் பொறுப்புகள் அதிகரிக்கிறது. திருமணம் ஆன சில நாட்கள் கழித்து எங்கேயாவது வெளியே சென்றால் மகிழ்ச்சியான செய்தி ஏதும் இருக்கிறதா என்று கேட்பார்கள். கர்ப்பம் என்பது சில பெண்களுக்கு சீக்கிரமே நடக்கும், சில பெண்களுக்கு மாதம் மற்றும் வருடம் கூட ஆகும். சில பேர் தான் கர்ப்பம் அடைந்திருக்கிரார்கள் என்பதை அறியாமல் இருக்கின்றார்கள். கர்ப்பமாக இருக்கும் போது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு அறிகுறிகள் வெளிப்படும். அதனை பற்றி அறிந்து கொள்வது நல்லது. அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் 40 நாட்கள் கர்ப்ப அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உடல் சோர்வு:

40 நாள் கர்ப்ப அறிகுறிகள்

40 நாட்கள் கர்ப்பத்தில் உங்களிடம் உடல் சோர்வு அதிகமாக காணப்படும். இவை ஹார்மோனின் மாற்றங்கள் ஏற்படுவதால் இந்த மாதிரியான உடல் சோர்வுகள் ஏற்படுகிறது.

குமட்டல்:

குமட்டல் என்பது எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம், இவை காலை அல்லது எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். சில நேரங்களில் வெறு வயிறாக இருந்தால் குமட்டல் ஏற்படும். இப்படி இல்லாமல் எப்போதும் குமட்டல் இருந்தால் அவை கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கும்.

மார்பக வலி:

மார்பகத்தில் வலி மற்றும் வீக்கம் காணப்படும். இவை குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு உருவாகி கொண்டிருப்பதால் மார்பகத்தில் இது மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகிறது.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்:

40 நாள் கர்ப்ப அறிகுறிகள்

நீங்கள் எப்போதும் கழிக்கும் சிறுநீரின் அளவை விட அதிகமாக கழித்தால் அவை கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டால் அவை சிறுநீர் தொற்றின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

மனநிலை மாற்றம்:

40 நாள் கர்ப்ப காலத்தில் மனநிலை ஏற்படுவது இயல்பு தான். ஏனென்றால் இவை ஹார்மோன் மாற்றங்களால் ஏற்பட கூடிய ஒன்றாக இருக்கிறது. இதனால் மனதளவில் பலவீனமர்களாக இருப்பீர்கள்.

மலசிக்கல்:

நீங்கள் எப்போதும் சாப்பிடும் உணவின் அளவை விட குறைத்து சாப்பிட்டாலும், வயிறு நிரம்பியதாக இருக்கும். இவை செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் மலசிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும், அதனால் தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும். நார்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

40 நாட்களில் வயிறு எப்படி இருக்கும்:

நீங்கள் 40 நாள் கர்ப்பத்தில் இருந்தால் இது உங்களுக்கு 6 வார கர்ப்பமாக இருக்கும். 6 வார கர்ப்பம் என்பது 2 மாத கர்ப்பத்தை குறிக்கும்.40 நாட்களில் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வயிறு அந்த அளவிற்கு பெரியதாக இருக்காது. உங்களுடைய வயிறு ஆனது எப்போதும் இருப்பது போல தான் இருக்கும். ஒருவேளை நீங்கள் இரட்டை குழந்தையை சுமந்தால் சற்று வயிறு காணப்படும்.

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now