Heat Stroke Symptoms in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் வாழும் இந்த காலகட்டத்தில் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, நோய்களை தான் கண்டறிந்து வருகிறார்கள். அப்படி ஒரு இக்கட்டான காலக்கட்டத்தில் தான் வாழ்ந்து வருகின்றோம்.
இப்படி ஒரு சூழலில் நம் உடலில் ஏதாவது சிறிய அறிகுறி தென்பட்டாலும் நாம் அலட்சியமாக விடக்கூடாது. அதனால் தான் நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு நோய்க்கான அறிகுறிகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று வெப்ப பக்கவாதம் என்றால் என்ன..? அதன் அறிகுறிகள் Heat Stroke Symptoms in Tamil என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
வெப்ப பக்கவாதம் என்றால் என்ன..?
இந்த வெயில் காலத்தில் நாம் அனைவருமே கொஞ்சம் எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். அதிலும் இந்த வெயில் காலத்தில் தான் வெப்ப பக்கவாதம் என்ற நோய் அதிகமாக வருகிறது.
அதாவது வெப்ப பக்கவாதம் என்பது Heat Stroke என்று சொல்லப்படுகிறது. ஹீட் ஸ்ட்ரோக் என்பது ஒரு அவசர மருத்துவ நிலை ஆகும். பொதுவாக, நமது உடல் அதிக வெப்பநிலையினை வேர்வையின் மூலம் வெளியேற்றி சமநிலைக்கு கொண்டு வருகின்றது. ஆனால் இந்நிலையில் நமது உடல் அதை செய்ய தவறிவிட்டால், நமக்கு வெப்ப பக்கவாதம் ஏற்படுகிறது.
இந்த ஹீட்-சார்ந்த நோய்கள் பொதுவாக கோடை கால சூழ்நிலையின் போது நீண்ட நேர சூரிய வெளிப்பாட்டினால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
விழித்திரையில் புற்றுநோய் ஏற்பட்டால் இந்த அறிகுறிகள் தான் இருக்குமா
வெப்ப பக்கவாதம் காரணம் என்ன..?
இந்த வெப்ப பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சூரிய வெளிபாடேயாகும். மேலும் இந்நிலையானது சூரிய ஒளியில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செயல்படுபவர்கள் எதிர்கொள்ளக்கூடியது.
அதுமட்டுமில்லாமல், ஹீட் ஸ்ட்ரோக்கால் அதிகமாக பாதிக்கப்பட கூடியவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம்.
- கைக்குழந்தைகள்
- முதியவர்கள்
- வெளிப்புற பணியாளர்கள்
- பருமனான நபர்கள்
- மன நோய் உடையவர்கள்
- மது அருந்துபவர்கள்
- போதிய திரவ உணவினை எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு
மேல்கூறியவர்கள் இந்த வெயில் காலத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வெப்ப பக்கவாதம் அறிகுறிகள்:
ஒருவருக்கு வெப்ப பக்கவாதம் இருப்பதை ஒரு சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம்.
- வேர்வையின்மையுடன் சிவந்த, சூடான, அல்லது வறண்ட சருமம்
- மூச்சு திணறல்
- மயக்கம்
- சோர்வு
- குமட்டல்
- வாந்தி
- தலைவலி
- அதிகரித்த இதய துடிப்பு
- குழப்பம்
- எரிச்சலூட்டும் தன்மை
வெயில் காலத்தில் ஒருவருக்கு மேல்கூறிய அறிகுறிகள் ஏதும் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.
ஹீட் ஸ்டோர்க் வராமல் பாதுகாப்பது எப்படி.?
- தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
- மெலிதான மற்றும் காட்டன் துணியை அணிய வேண்டும்.
- சூரிய ஒளிபடுமாறு வேலை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் நின்று வேலைபார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
- அப்படி வெயிலில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் தொப்பி அல்லது ஸ்கார்ப் போன்றவை அணிந்து செய்யலாம்.
ஹீட் ஸ்டோர்க் பாதிக்கப்பட்டவரை சரி செய்வது எப்படி.?
- ஹீட் ஸ்டோர்க் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முதலுதவியாக குளிர்ந்த இடத்திற்கு மாற்ற வேண்டும். ஈரமான துணிகளை மேலே வைத்து அவரை வெப்பத்திலிருந்து குளுமை படுத்த வேண்டும்.
- அக்குள் மற்றும் இடுப்பு பகுதியில் ஐஸ்கட்டியை வைக்க வேண்டும்.
- அதன் பிறகு மருத்துமனைக்கு செல்ல வேண்டும், அங்கு மருத்துவர்கள் நோயாளிகளை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |