கண் புற்றுநோய் அறிகுறிகள்

Advertisement

 Eye Cancer Causes Symptoms 

நம்முடைய தாத்தா, பாட்டிகள் எல்லாம் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். காரணம் அவர்கள்  எல்லாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டார்கள். அதனால் அவர்கள் எல்லாரும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு கூட பிரச்சனை ஏற்படுகிறது.மேலும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உடல்நல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சாதாரணமாக உடல் நல பிரச்சனை என்பது அனைவருக்கும் ஏற்பட கூடியது தான். ஆனால் இந்த பிரச்சனை ஆனது அதிகமாகும் போது  தான் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றது.

அந்த வகையில் பெரும்பாலானவர்களை பாதிக்க கூடியதாகவும், பயமுறுத்தும் நோயாக இருப்பது புற்றுநோய் தான். இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும் என்றாலும் கூட அதனை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால் தான் அதனை முழுவதுமாக குணப்படுத்த முடியும். அந்த வகையில் இன்றைய பதிவில் கண் புற்றுநோய் அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

கண் புற்றுநோய் வர காரணம்:

கண் புற்றுநோய் என்பது கண்ணின் எந்தப் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.  கண்களில் அல்லது அதைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து கட்டியை உருவாக்கும் போது இது நிகழ்கிறது. கட்டி தீங்கற்றதாக இருந்தால், அது வளரும் ஆனால் பரவாது. இது வீரியம் மிக்கதாக இருந்தால், அது வளர்ந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவ கூடிய ஒன்றாக இருக்கிறது.

  • மரபணு காரணங்களால் ஏற்படலாம்.
  • புற ஊதா கதிர்களால் ஏற்படும்.
  • வயது அதிகரிக்கும் போது கூட ஏற்படலாம்.
  • உடலில் வேறு எங்கும் புற்றுநோய் இருந்தால் கண்களில் கூட ஏற்படலாம்.
  • வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையினால் ஏற்பட கூடும்.
  • புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவதால் ஏற்படுகிறது.

கண் புற்றுநோய் அறிகுறிகள்:

 கண் புற்றுநோய் அறிகுறிகள்

  • கண் பார்வை மங்கலாக காணப்படுதல்
  • கண் இமைகளில் ஏதும் கட்டிகள் இருந்தால் அவை ஏற்படும்.
  • கருவிழியில் கரும்புள்ளி ஏற்படுதல்

விழித்திரையில் புற்றுநோய் ஏற்பட்டால் இந்த அறிகுறிகள் தான் இருக்குமா

Eye Cancer Treatment:

  • கண் புற்றுநோய் சிகிச்சையானது நோயாளியின் நிலையை பொறுத்து மாறுபடும். நோயின் பாதிப்பை பொறுத்து சிகிச்சையும் மாறுபடுகிறது.
  • முதலில் நோயாளியின் கண்களை டெஸ்ட் செய்ய வேண்டும்.
  • இமேஜிங் டெஸ்ட், மருத்துவ பரிசோதனை, பயாப்ஸி போன்ற டெஸ்டுகள் எடுக்கப்படும்.
  • அதன் பிறகு நோயின் நிலைமையை பொறுத்து மருந்து மற்றும் ஹீமோதெரபி சிகிச்சை செய்யப்படுகிறது.
  • கீமோதெரபி, கிரையோதெரபி, லேசர் சிகிச்சை, மற்றும் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் செய்யப்படுகிறது.

கண் புற்றுநோயை தடுப்பது எப்படி.?

கண் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதற்கு உங்களுடைய வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வாழ வேண்டும். சூரியனின் புற கதிர்களை தடுப்பதற்கு வெளியில் செல்லும் போது கண்ணாடி அணிந்து செல்வது நல்லது.

கண்களில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை அலட்சியம் செய்யாமல் உடனடியாக காண்பிப்பதன் மூலம் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil

 

Advertisement