உடலில் நீர்சத்து குறைவாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன..?

Advertisement

Dehydration Symptoms

அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் அனைவருமே 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். இந்த காலத்தில் இருக்கும் மருத்துவ தொழில்நுட்பங்கள் ஏதும் அந்த காலத்தில் கிடையாது. இருந்தாலும் அவர்கள் ஒரு நோய்க்கு பல மருந்துகளை கண்டறிந்து நோய்களை விரட்டி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

ஆனால் இந்த காலத்தில் பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் நாம் பல நோய்களை தான் கண்டறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்று உடலில் நீர்சத்து இல்லை என்றால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Symptoms Of Dehydration In The Body in Tamil:

Symptoms Of Dehydration In The Body

நம் அன்றாட வாழ்வில் நீர் எவ்வளவு முக்கியமானது என்று நம் அனைவருக்குமே தெரியும். நீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. இந்த உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்கு நீர் கட்டாயம் தேவை.

சரி மனிதன் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா..? மனிதன் ஒரு நாளைக்கு 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 8 கிளாஸ் வரை தண்ணீர் குடிப்பதால் நம் உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக இயங்குகிறது.

சரி ஒருவேளை உடலில் நீர்சத்து குறைவாக இருந்தால் அதை எப்படி தெரிந்து கொள்வது. அதற்கு சில அறிகுறிகள் தோன்றும். அதை பற்றி இங்கு பார்ப்போம்.

அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா?

Dehydration Symptoms in Tamil: 

  1. அதிக தாகம் எடுக்கும்.
  2. சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்திலும் மற்றும் எரிச்சலுடன் வெளியேறும்.
  3. வழக்கத்தை விட குறைவாக அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  4. மயக்கம் அல்லது தலைச்சுற்றல் போன்ற உணர்வு ஏற்படும்.
  5. சோர்வாக இருப்பதாக உணர்வீர்கள்.
  6. வாய், உதடுகள் மற்றும் நாக்கு வறண்டு காணப்படும்.
  7. குழி விழுந்த கண்கள்.
  8. தோல் வறண்டு காணப்படும்.

மேல்கூறிய அறிகுறிகள் இருந்தால் உங்கள் உடலில் நீர்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். அதற்கு நீங்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement