புயலிலே ஒரு தோணி கட்டுரை | Puyalile Oru Thoni Katturai in Tamil

Advertisement

புயலிலே ஒரு தோணி பற்றிய கட்டுரை | Puyalile Oru Thoni Katturai

புயலிலே ஒரு தோணி கட்டுரை: வணக்கம் நண்பர்களே இன்றைய கட்டுரை பகுதியில் புயலிலே ஒரு தோணி பற்றி பார்க்கலாம். குளத்திலும், ஆற்றிலும் தத்தளிக்கும் படகு போல தான் மனிதர்களாகிய அனைவருக்கும் வாழ்க்கை உள்ளது. எப்படி படகு புயல், சூறாவளி போன்ற இன்னல்களை சந்திக்கிறதோ, அதே போன்று மனித வாழ்க்கையிலும் சவால்கள், போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

எத்தனை புயல்களை ஒரு தோணி சந்தித்தாலும் அதை எதிர்த்து நின்று பயணிக்கும். அதே போல மனிதனும் இன்னல்களை சந்தித்து வாழ்க்கையில் வெற்றியை காண வேண்டும். இந்த புதினத்தை இயற்றிய ஆசிரியரின் நேரடி அனுபவங்கள் தான் புயலிலே ஒரு தோணி கதை. இந்த கதையை கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
ஆசிரியர்
புயலின் தொடக்கம்
கடற்கூத்து
அடுக்குத் தொடர்கள்
முடிவுரை

முன்னுரை:

Puyalile Oru Thoni Katturai: மனிதனின் வாழ்க்கை இயற்கையை போல இன்பமும், துன்பமும் நிறைந்தது. பிறப்பு முதல் நாம் உயிருடன் இருக்கும் வரை பணம், உணவு, உடை, வீடு என நமக்கு பல தேவைகள் இருக்கின்றன. கிடைத்தவற்றை வைத்து மகிழ்வதும், இல்லாத போது கவலையில்லாமல் இருப்பவர்கள் தான் நிறைவான மனிதர்கள். நம் வாழ்க்கையும் ஒரு தோணி போல தான் புயல் போல் சூழும் பிரச்சனைகளோடு போராடித்தான் ஆக வேண்டும். ப.சிங்காரம் அவர்களின் கற்பனை தான் இந்த கட்டுரை.

ஆசிரியர்:

Puyalile Oru Thoni Katturai in Tamil: இந்த புதினத்தை இயற்றியவர் ப.சிங்காரம் என்பவர். இவர் சிவகங்கையில் கு.பழனிவேல் நாடார், உண்ணாமலை அம்மாள் என்பவர்களுக்கு மகனாக பிறந்தவர்கள். இவர் இரண்டு புதினத்தை எழுதியுள்ளார் அவை கடலுக்கு அப்பால் மற்றும் புயலிலே ஒரு தோணி. இந்த நாவல் வெளியாகும் போது அவ்வளவு பிரபலம் அடையவில்லை. ஆனால் இப்பொழுது மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புயலின் தொடக்கம்:

Puyalile Oru Thoni Katturai: உச்சி வெயில் மெதுவாக மறைய ஆரம்பித்தது, மேகங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வானம் இருண்டு காணப்பட்டது. கப்பலோட்டிகள் மழை வர போகிறது என்று எண்ணி பாய்மரங்களை கட்ட ஆரம்பித்தனர். அப்பொழுது காதை பிளக்கும் அளவிற்கு இடியும், மின்னலும் வந்தது. அலைகள் வேகமாக அடிக்க ஆரம்பித்தன. அந்த அலையில் கப்பல் சுழல ஆரம்பித்தது.

கடற்கூத்து:

Puyalile Oru Thoni Katturai in Tamil: மழையின் துளிகள் யாவும் பெரிது பெரிதாக ஐஸ் கட்டி போல விழ ஆரம்பித்தன. வானம் எங்கிருக்கிறது, கடல் எங்கிருக்கிறது என்று தெரியாத அளவிற்கு மழை பெய்தது. கப்பலுக்குள் நீர் புகுந்துவிட்டது, உடனே கப்பலின் தலைவன் மற்றும் கப்பலோட்டிகள் அனைவரும் விரைந்து செயல்பட ஆரம்பித்தனர்.

தோணியில் இருந்த ஓட்டைகளை சரி செய்கின்றனர், கப்பலுக்குள் இருந்த தண்ணீரை மாலுமிகள் இறைக்கின்றார்கள். புயலுக்குப் பின்னால் ஐந்தாம் நாள் கரை தென்பட்டது. அடுத்த நாள் முற்பகல் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள்.

அடுக்குத் தொடர்கள்:

Puyalile Oru Thoni Katturai: தொங்கான் நடு நடுங்கித் தாவி தாவி குதித்தது. பிறகு தொங்கான் குதித்து விழுந்து நொறு நொறு என்று நொறுங்கியது. சுழன்று கிறு கிறுத்துக் கூத்தாடியது. கடலலைகள் மொத்து மொத்தென்று மோதின.

முடிவுரை:

Puyalile Oru Thoni Katturai in Tamil: இந்த கதையில் வரும் வருணனைகளும், அடுக்குத்தொடர்களும் மேலும் புயலில் தோணி படும்பாட்டை மிகவும் தத்ரூபமாக விவரிக்கின்றார் பா. சிங்காரம் அவர்கள்.

என் பள்ளி கட்டுரை

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement