பிரியாணி வரலாறு
சைவ உணவாக இருந்தாலும் சரி, அசைவ உணவாக இருந்தாலும் அனைவர்க்கும் பிடித்தது பிரியாணி தான். இந்த பிரியாணி என்றாலே சிலருக்கு வாய் ஊரும். அந்த அளவிற்கு மிகவும் பிடித்தது பிரியாணி தான். எத்தனை மணி வேண்டுமாலும் கிடைக்கும், அந்த அளவிற்கு பிரியாணி மோவ்ஸ் குறையாது.
யாருக்கு என்ன பார்ட்டி வைத்தாலும் அங்கு பிரியாணி என்ற வார்த்தை வராமல் இருக்காது. வீட்டில் விழாவாக இருந்தாலும் அங்கு இந்த ஒரு உணவு இல்லையென்றால் பந்தியே நன்றாக இருக்காது. இது போல் நிறைய விஷயங்களை சொல்கிக்கொண்டே போகலாம். அது வேணாம் இப்போது அதனுடைய வரலாறு என்ன என்பதை பார்ப்போம் வாங்க..!
பிரியாணி வரலாறு:
கடந்த 3 வருடமாக அதிக பயனர்களால் ஆர்டர் செய்து சாப்பிடக்கூடிய உணவுகளில் முதல் இடத்தில் இருப்பது பிரியாணி தான்.
பிரியாணி முதலில் யார் கண்டு பிடித்தார்கள். அது எப்போ கண்டு பிடித்தார்கள் என்று அதற்கு சரியான ஆதாரம் எதுவும் இல்லை. சொல்லப்போனால் பிரியாணி உடைய வரலாறே ரொம்ப பெரிய புதிராகத்தான் உள்ளது. ஆனால் பிரியாணி எப்படி உருவானது என்பது இப்போது தெரிந்துகொள்ளலாம்.
ஷாஜகான் மனைவி மும்தாஜ் அவர்களுடைய படைவீரர்கள் இருக்கக்கூடிய முகாமிற்கு சென்ற போது அங்கு படைவீரர்கள் அனைவரும் மிகவும் சோர்ந்து இருந்தார்கள் அதனை பார்த்தவுடன்.
அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுக்கும் படி சமையல் காரர்களை கூப்பிட்டு பிரியாணிக்கு செய்யக்கூடிய அனைத்து பொருட்களை சொல்லி செய்து கொடுத்தது தான் பிரியாணி என்று ஒரு கதை உள்ளது.
அதேபோல் Asaf-ud-Daula இருந்த பொழுது 1780 ஆம் ஆண்டு மிகப்பெரிய பஞ்சம் ஒன்று ஏற்பட்டது அப்போது அந்த மக்களுக்கு நிவாரண நிறைய வழிகளை வழங்கினார்கள் அதில் மசூதியோட கூடிய bara imambara என்ற புகழ்பெற்ற கட்டுமானத்தை கட்டி எழுதினார் இதை எப்படி காட்டினார் என்றார். அந்த கட்டிடத்தை எப்படி காட்டினார் என்றால் மக்களுக்கு உணவு வழங்கினார் அந்த உணவுக்கு ஈடாக மக்களை வைத்து அந்த கட்டிடத்தை காட்டினார்.
அப்படி அந்த மக்கள் கட்டவேண்டும் என்பதற்காக தன்னுடைய சமையல் காரர்களை கூப்பிட்டு சத்தான உணவுகளை செய்துகொடுக்கவேண்டும். என்பதை கொண்டுதான் அந்த சமையல்காரர்கள் செய்தது தான் பிரியாணி என்ற கதையும் உள்ளது.
தைமூர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த பொழுது அந்த படைவீரர்களுக்கு சத்தான உணவுகளை கொடுக்கவேண்டும் என்பதனால் உருவானது தான் பிரியாணி என்றும் ஒரு கதை இருக்கு.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 பீட்சாவின் வரலாறு
இதேபோல் நிறைய கதைகள் இருந்தாலும் அதனுடைய உண்மையான வரலாற்ரை ஓரளவு கண்டுபிடிக்க முடியும் என்பதனால் அதனுடைய பெயரை வைத்து அடையாள படுத்த முடியும்.
பிரியாணி என்ற சொல் பெர்சிய மொழியினுடைய biryan அல்லது Periyan என்று சொல்லிருந்து தான் பிறந்துள்ளது. அதற்கு பெர்சிய மொழியில் வருக்குறது என்று அர்த்தம். அதேபோல் இன்னொரு பெர்சிய சொல்லான Birinj என்பது அரிசியை குறிக்கும். அதனால் இதன் மூலம் பிரியாணி பிறந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள் . ஆகையால் பெர்சிய வேறு சொல்லால் பிரியாணி பிறந்திருக்கிறது என்பதனால் பிரியாணி பெர்சியாவில் தான் பிறந்திருக்கும் என்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.இன்னும் சொல்லப்போனால் பெர்சியாவில் pilaf அல்லது pilau என்ற உணவு ஆதி காலத்திலிருந்து உள்ளது. பிரியாணி பிறப்பதற்கு முன்பிலிருந்து. செய்து வருகிறார்கள் பெர்சியா மக்கள்.
இந்தியாவுக்கு பிரியாணி வந்த கதை:
மேற்கு ஆசியாவிலிருந்து வந்த உணவு தான் பிரியாணி என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள். பாரசீகத்திலிருந்து மத்திய ஆசியா, அங்கிருந்து இந்தியா என பிரியாணி பயணம் நீண்டு கொண்டே போனது. அரேபிய வியாபாரிகள் மூலம் கேரளாவுக்கும் பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இருந்து குஜராத், மஹாராஷ்ரா மாநிலங்களுக்கும் பிரியாணி வந்தது. இதனை தொடர்ந்து ஆம்பூர் பிரியாணி, ஹதராபாத் பிரியாணி என்ற பலவகையான பிரியாணி கால் பதிந்தது.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |