King Maker Kamaraj in Tamil History | Kamarajar Kingmaker in Tamil
படிக்காத மேதை, ஏழைப்பங்காளர் எனத் தமிழக மக்கள் இவருக்கு சூட்டிய பெயர்கள் ஏராளம். அவர் இம்மாநிலத்திற்குச் செய்த பால் நல்ல விஷயங்களை கொடுத்துள்ளார். குழந்தைகளின் பசியைப் போக்கும் மதிய உணவுத் திட்டம்போன்று பல விஷயங்களை செய்துள்ளார். காமராஜர் ஒரு தனித்துவம் வாய்ந்த மனிதர். ஆனால் மொத்த தேசத்தையும் பொருத்தமட்டில், காமராஜர் என்றால் ‘கிங் மேக்கர்’.
அதிகாரத்திற்கு அடித்துக்கொள்ளும் இன்றைய அரசியல்வாதிகள் இருக்கும் இதே இந்திய தேசத்தில் தான் பதவியாசை இல்லாமல், சொத்துகள் ஏதும் சேர்க்காமல், தம்மை தேடி வந்த பிரதமர் பதவியை மறுத்து இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கர் பெருந்தலைவர் காமராஜர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
கிங் மேக்கர் காமராஜர் வாழ்க்கை வரலாறு:
பிறப்பு:
1903 ஆம் ஆண்டு ஜீலை 15 ஆம் தேதி குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாளுக்கு மகனாக காமராஜர் விருதுநகரில் பிறந்தார். ”காமாட்சி” எனும் குலதெய்வத்தின் பெயரே ஆரம்பித்தில் இவருக்கு சூட்டப்பட்டது. அவரின் தாய் செல்லமாக ராசா என அழைப்பார்கள். பிற்காலத்தில் இவ்விரு பெயர்களும் சேர்ந்தே காமராசர் என்று மருவியது.
கல்வி:
காமராஜர் தனது பள்ளி படிப்பை விருதுநகரில் உள்ள வித்யா சாலா என்ற பள்ளியில் படித்தார். இவருக்கு பள்ளி படிக்கும் போது விட்டு கொடுக்கும் குணம் இருந்தது. இருந்தாலும் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. பள்ளி படிக்கும் போது அவரது தந்தை இறந்து விட்டார். அதனால் தனது மாமாவின் துணி கடாயில் வேலைக்கு சென்றார்.
காமராஜரின் அர்ப்பணிப்பு:
இவர் மாமாவின் துணிக்கடையில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது பல தலைவர்கள் பேசுவதை பார்த்து 1920ஆம் ஆண்டு தனது 16-ஆவது வயதில் காங்கிரஸ் கட்சியில்இணைந்தார். மக்களுக்காக அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் எண்று தனது மனதிற்குள்நினைத்து கொண்டார்.
சிறை வாழ்க்கை:
காமராஜர் வெள்ளையனே வெளியேறு இயக்கம், வேதாரண்ய உப்பு சத்தியாகிரக போராட்டம், விருதுநகர் குண்டுவெடிப்பு என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார்.
காமராஜரின் பொன்மொழிகள் :
- நாடு உயர்ந்தால் நாமும் உயர்வோம்.
- தாய்மார்கள் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது.
- எந்தவித அதிகார வர்க்கத்தில் இருந்தாலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் மற்றும் பொறுப்புணர்ச்சி இல்லாத அதிகாரம் என்றும் நிலைக்காது.
- ஒரு பெண் படிப்பது ஒரு குடும்பத்திற்கு படிப்பதற்கு சமம் என்பதாகும்.
மதிய உணவு திட்டம்:
காமராஜர் ஆட்சி காலத்தில் தான் இலவச கல்வி மற்றும் சீருடை மற்றும் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். நாட்டில் மூடப்பட்டிருந்த பள்ளிகளை திறந்தார். 17,000 பள்ளிகளையும் புதிதாகவும் திறந்தார். இதனால் தான் இவர் கல்வி கண் என்றழைத்தார்கள். குழந்தைகள் வறுமையினால் சிறுவயதிலையே வேலைக்கு போனார்கள். இதனை பார்த்து வருத்தப்பட்டார். அதனால் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தார். முதல் முறையாக ஆயிரம் விளக்கு என்ற பகுதியில் தான் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஒரு வேளை உணவு கிடைக்கும் என்ற எண்ணத்துடன் குழந்தைகள் பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள். அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆனது 37% உயர்ந்தது.
காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்
தமிழக முதல்வராக காமராஜர்:
1947-ம் ஆண்டு பிரிட்டிசுமிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காமராஜர் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். சுதந்திர போராட்டத்தில் அவரது தியாகம் மற்றும்ம் பணியின் காரணமாக அவர் 1952– ஆம் ஆண்டு பாரளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1954-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
சாதனைகள்:
- பள்ளியில் இலவச உணவு திட்டம்
- இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் திட்டம்
- நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்
- பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ்
- பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட்
- மேட்டூர் காகித தொழிற்சாலை
- மேட்டூர் அணை திட்டம்
- காவேரி டெல்டா திட்டம்
காமராஜர் தமிழ்நாடு:
காமராஜர் பதவியேற்றதும் முதலில் நாடு முன்னேற்றத்திற்காகவும், மற்றும் நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேறுவதற்காகவும் கல்வி மற்றும் தொழில் ஆகிய இரண்டிற்கும் முன்னுரிமை அளித்தார்கள்.
நாட்டில் பள்ளிகளில் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார்கள்.மாணவர்களின் நலனை மனதில்வைத்து உணவு திட்டத்தையும் கொண்டு வந்தார்.
காமராஜர் ஆட்சியில் தான் முதல் முதலில் எண்ணற்ற அணைகள் கட்டப்பட்டன. அதில் முக்கியமானதாக, பவானி திட்டம், மணிமுத்தாறு, மேட்டூர் கால்வாய் திட்டம், வைகை அனைத்திட்டம், ஆழியாறு பாசன திட்டம், காவேரி டெல்டா வடிகால் வாரியத் திட்டம், பரம்பிக்குளம் மற்றும் கிருஷ்ணகிரி அரணியாறு ஆகிய நதித்திட்டங்களை ஆரம்பித்தும் அதனை நிறைவேற்றியும் காட்டினார்.
கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களுக்கும் உள்ள மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தொட்டி பாலம் ஒன்றை அமைத்தார். இவை உலகிலையே யாரும் செய்யாதது. இன்றளவும் உலகிலையே பெரிய தொட்டி பாலமாக அமைந்து வருகிறது.
இறப்பு:
காமராஜர் 1975-ம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இந்த உலகத்தை விட்டு பிரிந்தார். மண்ணுலகை விட்டு பிரிந்த பிறகு இந்திய அரசாங்கம் 1976 இல் மிகவும் மதிப்புமிக்க “பாரத ரத்னா” விருதை வழங்கி கௌரவித்தது.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |