பிறந்தநாள் வாழ்த்து பாடல் வரிகள்

Advertisement

Birthday Poem in Tamil

நம் முன்னோர்களின் காலத்தில் பிறந்த நாள் எல்லாம் பெரிதாக கொண்டாட மாட்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். அதுவும் பெரும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீட்டை அலங்கரித்து கேக் வெட்டி கொண்டாடுவார்கள். அப்போது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள்.

மேலும் கேக் வெட்டும் போது பிறந்த நாள் வாழ்த்து பாடல்களை பாடி தான் கேக்கை வெட்டுவர்கள். இந்த பாடலை பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் தான் பாடுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் பிறந்த நாள் வாழ்த்து பாடல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிந்து கொள்வோம் வாங்க..

பிறந்தநாள் வாழ்த்து பாடல் வரிகள்:

நீண்ட நீண்ட காலம் நீ!

நீடு வாழ வேண்டும்!

வானம் தீண்டும் தூரம் நீ!

வளர்ந்து வாழ வேண்டும் !

அன்பு வேண்டும்!

அறிவு வேண்டும்!

பண்பு வேண்டும்!

பரிவு வேண்டும்!

எட்டுத்திக்கும் புகழ வேண்டும்!

எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!

உலகம் பார்க்க

உனது பெயரை

நிலவு தாளில் எழுத வேண்டும்.

சர்க்கரைத் தமிழள்ளித்

தாலாட்டுநாள்

சொல்லி வாழ்த்துகிறோம்

பிறந்த நாள் வாழ்த்துகள்!

பிறந்த நாள் வாழ்த்துகள்!

இனிய பிறந்த நாள்வாழ்த்துகள்!

Short Birthday Poem in Tamil:

தேவதைகள் எல்லாம்
தேடிவரும் பிறந்தநாளில்
உன்னைப் பார்த்திட..
தேவர்களும் தேடி அலைவார்கள்
பிறந்தநாளில் உன்னை வாழ்த்தி
வணங்கிட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

நூறு வயதை கடந்தும்
வாழ்க.. பல்லாண்டு..!
என வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

நீ கண்ட கனவுகள் ஒவ்வொன்றாக
நிறைவேற இந்த நல்ல நாளில்
மனமார வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

birthday poem in english

“Happy birthday to you”
Happy birthday to you
Happy birthday dear name
Happy birthday to you.

மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Wishes in Tamil
Advertisement