ஓய்வு நாள் வாழ்த்துக்கள்
மனிதனின் வாழ்க்கையில் வேலை என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வேலையில் இரண்டு விதமான வேலைகள் இருக்கிறது. ஒன்று அரசாங்க வேலை, மற்றொன்று தனியார் வேலை. இந்த வேலைகளில் 60 வயது ஆன பிறகு ஓய்வு என்பது கிடைக்கும். 60 வயது முடிந்து வேலைக்கான கால அளவு முடிந்த பிறகு அவர்களுக்கான பாராட்டு விழா நடக்கும். இந்த வேலையில் முடிந்த பிறகு அவர்களை பாராட்டுவதற்கான வாழ்த்துக்களை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
Short Retirement Wishes in Tamil
இனிய ஓய்வுநாள் வாழ்த்துக்கள்

Inspirational Retirement Wishes in Tamil:
பணி ஓய்வு பணி நிறைவு வாழ்த்துக்கள்

Happy Retirement Wishes in Tamil:
உன்னில் சிறியவர் நாங்கள் எனினும்
வாழ்த்துகிறோம் உன்னை நன்னலம் பெறவே
ஆண்டவன் திருவருளாலே
மண்ணில் மகிழ்வுடன் வாழ்க பல்லாண்டு.
நாங்கள் கேட்பது உங்கள் ஆசீர்வாதம்

Retirement Wishes in Tamil Kavithai:
விடுமுறை என்று பாராமல்,
வேலையாக பார்க்காமல்
வேர்வை வர உழைத்து..!
உங்களால் முடிந்த அளவிற்கு..!
இந்த நிறுவனத்திற்கு உழைத்த எங்கள் அன்புடைவருக்கு.
வாழ்க்கையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..!

பணி ஓய்வு வாழ்த்துக்கள் தமிழில்:
உழைப்பு ஒன்றே பணத்துக்கு ஈடாம்
அறிவு என்ப உழைப்புக்கு துணையாம்
அறிவோடு உழைப்பது நல்ல திறனாம்
உழைக்காது உண்பது உலகின் கேடாம்
உழைப்பை வாழ்விற்கான கடமை ஆக்கி
உலகிடம் பெற்றதர்க்கு அதனை ஈடாக்கி
இதுவரை ஆனதை உனது அனுபவமாக்கி
அகவை அறுபதில் எல்லாம் நிறைவாக்கி
இனிய வாழ்வில் ஓய்வை துணையாக்கி
தனதனுபவம் பகர்ந்திட இறங்கி விட்டாய்
இனிவரும் அனுபவம் அனைத்தும் நலமாய்
அமைந்திட என்றும் இறையே அருள்வாய்
Retirement Quotes in Tamil:
ஓடின வருடங்கள்
நனவாகின கனவுகள்
முடிந்தன கடமைகள்
ஓய்வெடுக்கும் நேரம் இனி
நெஞ்சில் நிலைத்து நிற்கும் நினைவுகள் மட்டும்
பணி நிறைவு என்பது ஒரு புதிய ஆரம்பம்.

பணி ஓய்வு வாழ்த்துக்கள்:
எத்தனை ஆண்டுகள், செல்விட்டீர்கள் பணிக்கே!
கஷ்டமோ நஷ்டமோ, அனைத்தையும் தந்தீர்கள், பணிக்கே.
நல்லிதயத்துடன், புன்னகையுடன் நல்கினீர்கள் உம் வாழ்வை, பணிக்கே.
சோதனைகள், வெற்றிகள், உயர்வுகள், தாழ்வுகள்
எதுவான போதிலும் உங்கள் அர்ப்பணிப்பு, பணிக்கே.
ஒவ்வொரு தினமும் மணித்துளியும், ஆரவாரமாகப் போயின பணிக்கே.
உமது தயாள குணமும், எதையும் எதிர்பாரா பண்பும் செலவானது பணிக்கே.
இருபதுகளில் நுழைந்தீர்கள் அறுபதுகள் வரை செய்த தியாகம் பணிக்கே.
பலர் மனதைத் தொட்டீர்கள், பணியிலே.
பன்மதிப்பு நிறைந்த நினைவுகளை விட்டுச் செல்கிறீர்கள், பணியிலே.
உம்முடன் உழைத்த நாம் நண்பராகினோம், பணியிலே.
சக வேலையாளர் குடும்பம் போலாயினர், பணியிலே.
நட்பு வளர்ந்ததும் சிரிப்புக் கதைகள் கதைத்ததும் பணியிலே.
உமது உழைப்பின் தாக்கம் வெகுதூரம் போயுள்ளதும் பணியிலே.
மரியாதை பெற்றதும் பணியிலே. பெருமை பெற்றதும் பணியிலே.
ஓய்வெடுக்கவும் காலம் வந்துவிட்டது.
கண்ட கனவுகள் நினைவாகும் காலம் வந்துவிட்டது.
மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் புது முயற்சிகள் செய்யும் காலம் வந்துவிட்டது.
Retirement Wishes in Tamil Kavithai:
புதியதொரு சகாப்தம் வந்துவிட்டது.
பணி முடிந்தாலும், எம்முடன் கொண்ட பிணைப்பு நிலைத்திருக்கும்.
எம் இதயங்களில் நீர் பாய்ச்சிய ஒளியும் நிலைத்திருக்கும்.
நீர் எங்கள் வழிகாட்டி, எங்கள் நண்பர்,
நாம் பயணித்த பயணத்தில், கண்ட ஒரு வெற்றி, உங்கள் ஓய்வு.
ஓய்வுநிலை வாழ்க்கையை அனுபவியுங்கள்,
நீங்கள் அதை வென்றெடுத்தீர்கள்.
நன்றியுடனும் அன்புடனும் நாம் கூறுவது, ‘வாழிய நீடூழி’!
| மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |














