Grape Juice Making Business in Tamil
இன்றைய கால கட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளித்து ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார நஷ்டமும் வராமல் நடத்தி செல்வது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. அதனால் குடும்பத்தில் உள்ள அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழில் அல்லது வேலைக்கு செல்ல வேண்டும்.
அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் திராட்சை ஜூஸ் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளவோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Grape Juice Making Business Plan in Tamil:
இன்றைய கால கட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளின் மீதான மதிப்பும், ஆர்வமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. அதனால் நீங்கள் இந்த திராட்சை ஜூஸ் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
தேவையான மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள திராட்சை, சர்க்கரை, கண்ணாடி பாட்டில்கள் மற்றும் Packing Machine ஆகியவை ஆகும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ மிகவும் புதுமையான தொழில் தினமும் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
தேவையான முதலீடு:
1 கிலோ திராட்சையின் விலை தோராயமாக ரூபாய் 130, 1 கிலோ சர்க்கரையின் விலை தோராயமாக ரூபாய் 35 மற்றும் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும்.
தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:
இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
அதே போல் நீங்கள் தயாரித்து வைத்துள்ள திராட்சை ஜூஸினை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழில் தொடங்குவதற்கு நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ இந்த தொழிலை மட்டும் செய்தால் வாரம் 1,19,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள நல்ல நிலையில் உள்ள திராட்சையை தண்ணீரை ஊற்றி நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடனே நாம் வாங்கி வைத்துள்ள சர்க்கரையையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை நன்கு வடிகட்டி நாம் வாங்கி வைத்துள்ள கண்ணாடி பாட்டில்களில் ஊற்றி Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
விற்பனை செய்யும் முறை:
நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள திராட்சை ஜூஸினை ஜூஸ் கடைகள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் நேரடியாக சென்று விற்கலாம். அப்படியில்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.
வருமானம்:
தோராயமாக 1 லிட்டர் திராட்சை ஜூஸின் விலை 115 ரூபாய் முதல் 120 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 20 லிட்டர் ஜூஸினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 2,300 ரூபாய் முதல் 2,400 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
தோராயமாக ஒரு மாதத்திற்கு 69,000 ரூபாய் முதல் 72,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த திராட்சை ஜூஸ் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ ஒரே வாரத்தில் 70,000 ரூபாய் வரை சம்பாதிக்கக்கூடிய அருமையான தொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |