அம்மிக்கல் in English | Ammikal in English Meaning
Ammi Kal in English: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அம்மி என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்வோம். தமிழில் நாம் உபயோகப்படுத்துகிற பல வார்த்தைக்கு ஆங்கிலத்தில் என்ன அர்த்தம் என்று தெரிவதில்லை. அதிலும் பழங்காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட இன்றும் உபயோகத்தில் இருக்க கூடிய பொருளுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று தெரியாமல் உள்ளது. அப்படிப்பட்ட பொருளில் ஒன்று தான் அம்மிக்கல். இதற்கான பெயரை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறிர்கள் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது, ஆமாம் இந்த பதிவில் அம்மிக்கல் ஆங்கில பெயரை தெரிந்து கொள்வோம் வாங்க.
அம்மிக்கல் ஆங்கில பெயர் | Ammi Kal English Name:
- Grinding Stone or Stone Grinder என்பது அம்மிக்கல் என்பதற்கான ஆங்கில பெயராகும்.
- ஒரு சிலர் Masala Stone என்ற பெயரால் அழைப்பதும் உண்டு.
அம்மிக்கல் Meaning in Tamil:
- Ammikal in English Word: இது கருங்கல்லினால் செய்யப்பட்ட ஒரு பொருளாகும். சமையல் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை அரைப்பதற்கு பயன்படுகிறது. அம்மி பெரும்பாலும் சமைப்பதற்கு உதவுகிறது.
- சமதளமான அம்மி மற்றும் உணவு பொருளை அரைப்பதற்கு உருளை வடிவில் குழவி இருக்கும். குழவியின் இரண்டு முனையையும் பிடித்து கொண்டு உருட்டியும், இடித்தும், இழுத்தும் அரைப்பார்கள்.
- சமையல் பொருட்கள் நன்றாக அரைவதற்கு கல்தச்சர் அம்மியில் உளியை வைத்து சிறு சிறு துளையிடுவர், இந்த துளையின் மூலம் உராய்வு ஏற்பட்டு சமையல் பொருள் நன்றாக அரையும். மஞ்சள், மிளகு, ஜீரகம் மற்றும் பல சமையல் பொருட்களை அரைப்பதற்கும், நசுக்குவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.
- பழங்காலத்தில் இருந்து இன்றும் பெரும்பாலான மக்கள் அம்மிக்கல்லை உபயோகப்படுத்துகிறார்கள். அந்த காலத்தில் பெண்கள் உடல் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருந்ததற்கு இந்த கருவியும் உறுதுணையாக இருந்தது என்று கூறுவார்கள்.
அம்மிக்கல் பயன்கள்:
- Ammi English Name: அம்மிக்கல்லை உபயோகப்படுத்துவதன் மூலம் உங்களுக்கு உடற்பயிற்சி செய்ய உதவுகிறது, இதனால் உடலில் உள்ள கொழுப்பு குறைந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவும்.
- மிக்சியில் அரைக்கும் சட்னி அல்லது மசாலா பொருட்கள் அந்த அளவிற்கு சுவையை தருவதில்லை, ஆனால் அம்மியில் அரைக்கும் சட்னிகள் உணவிற்கு சற்று கூடுதலான சுவையை தருகிறது என்றே சொல்லலாம்.
- அம்மியை நீங்கள் பெரும்பாலும் உபயோகப்படுத்தினால் மின்சாரத்தின் தேவை குறையும், எனவே இது பொருளாதார ரீதியாகவும், உடல் ஆரோக்கியத்திற்கும் பயன் உள்ளதாக இருக்கிறது.
பம்பரம் ஆங்கில பெயர் என்ன தெரியுமா? |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.Pothunalam.com |