C name characters in tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் C என்ற பெயரை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்துகொள்வோம். பொதுவாக நாம் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்வதற்கு ஆர்வமாக இருக்கும். இன்னொருவர் அவர்களை பற்றி சொன்னால் சொல்லு சொல்லு என்று அவர்களை நச்சரித்து கொண்டே இருப்பார்கள். இனி மற்றவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். உங்களின் பெயரின் முதல் எழுத்தை அடிப்படையாக வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று பதிவிட்டுள்ளோம். அதனை பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவில் கடைசியாக உள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள். இப்போது C-யில் பெயர் ஆரம்பிப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ E என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பம் ஆகிறதா..! அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள்
C என்ற பெயரில் ஆரம்பிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்:
C எழுத்தில் பெயர் உள்ளவர்களிடம் கற்பனை திறன் அதிகமாக இருக்கும். இவர்கள் கூட இருப்பவர்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள்.
இவர்கள் ஒருவரை பிடித்து விட்டது என்றால் அவர்களிடம் நெருக்கம் ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் இவர்களுக்கு பிடித்தவர்களை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்க மாட்டார்கள்.
இவர்கள் எதை பற்றி கேட்டாலும் புட்டு புட்டு வைப்பார்கள். அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார்கள். மேலும் மேலும் புது புது விஷயங்களை தெரிந்துகொள்வதற்கு ஆர்வமாக இருப்பார்கள்.
இவர்களின் வாழ்க்கை போராட்டமாக இருக்கும். குடும்பத்திற்காக இவர்களுக்கு பிடித்த விஷயங்களை கூட விட்டு கொடுப்பார்கள்.
பணத்தை இவர்கள் இதற்காக செலவு செய்யலாமா..! இல்லை தேவையில்லாத என்று யோசித்து தான் செயல்படுவார்கள். இந்த செயல் பணத்திலும் மட்டுமில்லை எந்த செயல் செய்தாலும் யோசித்து நிதானமாக செய்வார்கள்.
இவர்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை செய்து முடித்து விட்டு தான் மறு வேலை செய்வார்கள்.
இவர்களின் பிறப்பு எப்படி இருந்தாலும் அதை விட உயர வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
இவர்கள் அதிகமாக கோபம் படும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். இந்த குணத்தால் சில வாய்ப்புகளை மிஸ் செய்திருப்பார்கள்.
இவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் சிறந்து விளங்குவார்கள்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |