current account meaning in tamil..!
வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்று நாம் பார்க்கப்போவது நாம் அனைவருக்கும் தெரியவேண்டிய ஒரு முக்கியமான தகவல் பற்றித்தான். அது என்னவென்றால் Current Account என்றால் என்ன..? என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக நாம் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க செல்லும்போது நமது ஏடிஎம் கார்டை சரி பார்த்தபிறகு நம்மிடம் முதலில் கேட்கப்படும் கேள்வியே நீங்கள் எந்த கணக்கிலிருந்து பணம் எடுக்க விரும்புகிறீர்கள் என்றுதான்.
அதுவும் Current Account-அ இல்லை Savings Account-அ என்று இரண்டு Option இருக்கும் அதற்கு சாமானிய மக்கள் பொதுவாக Savings Account-யை தேர்வு செய்வார்கள். ஆனால் இந்த Current Account எதற்காக என்று என்றாவது சிந்தித்து இருக்கீர்களா.! அப்படி சிந்தித்து இருந்தீர்கள் என்றால் இந்த பதிவை முழுதாக படித்து பாருங்கள் உங்களுக்கே புரியும்.
Current Account என்றால் என்ன.?
Current Account என்றால் தமிழில் நடப்பு கணக்கு என அழைக்கப்படுகிறது. இந்த நடப்பு கணக்கை பொதுவாக நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
ஏனென்றால் நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் அதிக பணப்பரிவர்த்தனை செய்வார்கள். அதற்கு ஏற்ற வகையிலான வங்கி கணக்கு சேவையே Current Account என்று அழைக்கப்படுகிறது.
நடப்புக் கணக்கு என்பது, ஒரு நாட்டின் பரிவர்த்தனைகளை பதிவு செய்கிறது. பொதுவாக வணிகர்கள், வணிக நிறுவனங்கள், வணிகக் குழுமங்கள், பொது வணிக ஸ்தாபனங்கள் ஆகியோர் Current Account வைத்திருப்பார்கள்.
Current Account-ல் டெபாசிட், பணம் திரும்பிப் பெறுதல் போன்ற அனைத்து விதமான வங்கி சேவைகளும் கிடைக்கும்.
Current Account-ஐ வணிக வங்கிகள் என அழைக்கப்படும் SBI, HDFC வங்கி போன்றவற்றில் திறக்கலாம். வரம்பற்ற பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.
வங்கியின் எந்தக் கிளைகளிலிருந்தும் Current Account-ல் பணம் டெபாசிட் செய்ய மற்றும் திருப்பி எடுக்க அனுமதி உண்டு.
இதையும் பாருங்கள்=> Fixed Deposit பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |