DTCP Meaning in Tamil..!
வணக்கம் நண்பர்களே… இன்றைய பதிவில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம். அனைவருக்குமே சொந்தமாக ஒரு நிலம், வீட்டுமனை அல்லது சொந்தமாக வீடு வாங்கவேண்டும் என்று பல கனவுகள் இருக்கும். அதுபோல நிலம் வாங்கும் போது நமக்கு பல குழப்பங்கள் வரும். எப்படி நிலம் வாங்குவது..? என்பது போன்று பல கேள்விகள் இருக்கும். நிலம் வாங்கும் போது சிலர் DTCP அப்ரூவல் பெற்றிருக்க இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். இவற்றை பற்றி நாம் தெளிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ இணையதளம் பற்றிய விவரங்கள்
DTCP என்றால் என்ன..?
DTCP என்பது நகர ஊரமைப்பு இயக்கம் ஆகும். நாம் கட்டும் நிலத்திற்கு அங்கீகாரம் பெறுவது, அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுதல் அல்லது விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல் போன்றவற்றிற்கு நகர ஊரமைப்பு இயக்கத்தின் அனுமதி தேவைப்படும். நகர ஊரமைப்பு இயக்கத்தை தான் DTCP என்று கூறுகிறோம்.
DTCP என்பது ஆங்கிலத்தில் Directorate Of Town And Country Planning என்பதாகும். DTCP என்பது நிலத்தில் லே-அவுட் (Lay Out) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுவதே DTCP அப்ரூவல் என்று கூறுகிறார்கள்.
அதாவது, நீங்கள் வாங்கும் வீட்டுமனை உங்கள் ஊர் பகுதியின் எல்லைக்கு வெளியே இருந்தால் அதற்கு DTCP அப்ரூவல் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் வீடு கட்டுவதற்கு DTCP அப்ரூவல் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும்.
அப்படி DTCP அப்ரூவல் இல்லாமல் வீடுகட்டினால் வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்காது. DTCP அப்ரூவல் பெறுவது என்பது சுலபமான விஷயம் கிடையாது.
நீங்கள் வாங்கும் நிலம் முறையான அனுமதியை பெற்றிருக்கிறதா என்பதை ஒரு வழக்கறிஞர் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை கவனமாக பார்த்த பின்னரே பத்திர பதிவு செய்யவேண்டும்.
மால்வேர் என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? |
நீங்கள் அதற்கான ஆவணங்களை பூர்த்தி செய்து நகர ஊரமைப்பு அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அதன் பின் ஒரு மாதத்திற்கு பிறகு நகர ஊரமைப்பு அலுவலகத்திலிருந்து உங்களின் மனையை பார்வை இடுவார்கள். உங்களின் மனையில் தேவையான வசதிகள் இருக்கிறதா என்பதை பார்வை இடுவார்கள்.
அதுபோல உங்கள் நிலம் விவசாய நிலமாக இருந்தால் அதற்கு DTCP அப்ரூவல் பெற முடியாது. அதுமட்டுமின்றி DTCP அப்ரூவல் இல்லாமல் வீட்டு மனைகள் அல்லது நிலங்கள் வாங்கவோ விற்கவோ கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், DTCP அப்ரூவல் இல்லாத மனையில் வீடு கட்டினால் அதனால் பல சிக்கல்கள் வரும். அதனால் வீடு அல்லது நிலம் வாங்கும் போது DTCP அப்ரூவல் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |